திருப்பதி தரிசனம் – 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு கட்டுப்பாடு? தேவஸ்தானம் விளக்கம்!

0
திருப்பதி தரிசனம் - 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு கட்டுப்பாடு? தேவஸ்தானம் விளக்கம்!
திருப்பதி தரிசனம் - 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு கட்டுப்பாடு? தேவஸ்தானம் விளக்கம்!
திருப்பதி தரிசனம் – 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு கட்டுப்பாடு? தேவஸ்தானம் விளக்கம்!

திருப்பதியில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மூன்று நாட்களுக்கு முன்னதாக எடுத்த கொரோனா பரிசோதனைக்கான நெகட்டிவ் சான்றிதழை கொண்டு வந்தால் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

பக்தர்களுக்கு அனுமதி:

கொரோனா தாக்கத்தின் காரணமாக பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து திருவிழாக்கள் மற்றும் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது பொதுமக்கள் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – பணமோசடி எச்சரிக்கை!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொலைபேசி வாயிலாக பக்தர்களின் குறை கேட்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில், தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் விதமாக கட்டாயம் இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். மேலும் இல்லையென்றால் 72 மணி நேரத்திற்கு முன்பு எடுத்த கொரோனா பரிசோதனை செய்வதற்கான சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.

பெண்களின் திருமணத்திற்கு உகந்த LIC பாலிசி – ரூ.27 லட்சம் வரை பெறலாம்!

18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி இல்லாத காரணத்தால் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 72 மணி நேரத்திற்கு முன்பு எடுத்த கொரோனா பரிசோதனை செய்வதற்கான சான்றிதழ் கொண்டு வந்தால் கோவிலில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என நிர்வாகத்தின் சார்பாக தேவஸ்தான செயல் அலுவலர் ஜவஹர் ரெட்டி கூறியுள்ளார். மேலும் ஏழாம் தேதி முதல் 15ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here