ஆதார் அட்டையில் தனிப்பட்ட நபரின் முகவரியை மாற்ற வேண்டுமா? – புதிய வழிமுறைகள்!

0
ஆதார் அட்டையில் தனிப்பட்ட நபரின் முகவரியை மாற்ற வேண்டுமா? - புதிய வழிமுறைகள்!
ஆதார் அட்டையில் தனிப்பட்ட நபரின் முகவரியை மாற்ற வேண்டுமா? - புதிய வழிமுறைகள்!
ஆதார் அட்டையில் தனிப்பட்ட நபரின் முகவரியை மாற்ற வேண்டுமா? – புதிய வழிமுறைகள்!

ஆதார் அட்டையில் நமது மொத்த குடும்ப உறுப்பினர்களின் முகவரியும் ஒன்றாக தான் இருக்கும். ஆனால் சில தனிப்பட்ட காரணங்களுக்காக சிலரின் முகவரியை மாற்றம் செய்வதற்கான அனுமதியை UIDAI வழங்கியுள்ளது.

UIDAI அனுமதி:

ஆதார் அட்டையில் நமது பெயர், பிறந்த தேதி, தந்தை அல்லது பாதுகாவலர் பெயர், முகவரி போன்ற தகவல்கள் இருக்கும். ஆனால் ஆதாரின் மின்னணு சிப்பில் நமது கண் கருவிழி, கை ரேகை உள்ளிட்ட பயோ மெட்ரிக் தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். நாட்டில் அனைத்து வித அடையாள ஆவணமாகவும் ஆதார் விளங்குகிறது. இதனால் ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை நாம் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

தமிழக ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்வு – பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.. இலவச எண்கள் அறிவிப்பு!

பொதுவாக குடும்ப தலைவரின் முகவரி தான் அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் பதிவிடப்பட்டிருக்கும். ஆனால் சில குடும்ப உறுப்பினர்கள் பல்வேறு காரணங்களுக்காக வேறு மாவட்டம் அல்லது முகவரியில் குடியேற வேண்டிய நிலை இருக்கலாம். இது போன்ற சூழ்நிலைகளில் குடும்ப தலைவரின் ஒப்புதலுடன் ஆதாரில் உறுப்பினரின் முகவரியை மாற்றிக் கொள்ள UIDAI அனுமதி அளித்துள்ளது. தங்களுடைய சொந்த பெயரில் ஆதார் ஆவணங்கள் இல்லாத குழந்தைகள், மனைவி, பெற்றோர் போன்ற உறவினர்களுக்கு அவர்களின் ஆதாரில் முகவரியைப் புதுப்பிக்க வசதியாக இந்த திட்டம் உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இதற்காக, திருமணச் சான்றிதழ், பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, மார்க் சீட் போன்ற சான்றுகளை சமர்ப்பித்து இதற்கான செயல்பாடுகளை ஆன்லைன் மூலம் செய்து கொள்ளலாம். ‘My Aadhaar’ போர்டல் தலத்தில் குடும்ப தலைவரின் ஆதார் எண்ணை உள்ளிட்டு, சரிபார்க்கப்படும். இந்த முகவரி மாற்றம் குறித்து குடும்ப தலைவருக்கு கோரிக்கை SMS மூலம் அனுப்பப்படும். அதனை 30 நாட்களுக்குள் அவர் ஒப்புதல் அல்லது நிராகரிப்பு செய்ய வேண்டும். 30 நாட்களுக்கு பின்னர் கோரிக்கை மூடப்படும். இதற்கு ரூ.50 சேவைக்கட்டணமாக செலுத்த வேண்டும்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!