தமிழகத்தில் இடஒதுக்கீடு அளவு உயர்வு.. அரசிடம் கோரிக்கை – வெளியான தகவல்!
தமிழகத்தில் பீகார் மாநிலத்தை போல இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி இருக்கிறார்.
இடஒதுக்கீடு உயர்வு
பீகார் மாநில அரசு ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன் விவரங்களை வெளியிட்டது. அதன் பின் முதல்வர் நிதிஷ்குமார் மொத்த இடஒதுக்கீட்டின் அளவை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தப்படும் என அறிவித்தார். இதற்கு பல மாநிலங்களில் இருந்து வரவேற்பு வந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் இடஒதுக்கீடு உயர்த்த வேண்டும் என பாமக தலைவர் அனுப்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.
128 பந்துகளில் 201 ரன்கள் விளாசி மேக்ஸ்வெல் சாதனை – ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி!!
அதில் சமூகநீதியை நோக்கிய துணிச்சலான பயணத்தில் பீகாருடன் தமிழகமும் தன்னை இணைத்து கொள்ள வேண்டும். உடனடியாக தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர், இஸ்லாமியர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், அருந்ததியர், பழங்குடியினர் ஆகிய அனைத்து இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி இருக்கிறார்.