தமிழகத்தில் மார்ச் 4ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு? அரசுக்கு கோரிக்கை!

0
தமிழகத்தில் மார்ச் 4ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு? அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் மார்ச் 4ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு? அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் மார்ச் 4ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு? அரசுக்கு கோரிக்கை!

தமிழகத்தில் வரும் மார்ச் 4ம் தேதியன்று அய்யா வைகுண்டர் பிறந்த தினத்தை முன்னிட்டு பொது விடுமுறை அளிக்க முதல்வர் முக ஸ்டாலின் உரிய நடவடிக்கை வேண்டும் என்று சாமிதோப்பு பாலஜனாதிபதி என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொது விடுமுறை

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமிதோப்பு பகுதியில் தோன்றிய ஒரு சமய கோட்பாட்டு ஸ்தாபகர் ஆன அய்யா வைகுண்டர் அவர்களின் பிறந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 4ம் தேதியன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அய்யா வைகுண்டர் பிறந்த தினத்தை முன்னிட்டு மார்ச் 4ம் தேதி அன்று பொது விடுமுறை அளிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சினிமா நடிகைகளை விட அதிக சம்பளம் வாங்கும் விஜய் டிவி சீரியல் நடிகைகள் – ரசிகர்கள் ஷாக்!

இது தொடர்பாக சாமிதோப்பு பாலஜனாதிபதி அரசுக்கு அளித்துள்ள மனுவில், ‘தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டு எடுப்பதற்காக போராடி, ‘தற்காப்பதுவே தாமம்’ என்பது போல அனைத்து மக்களையும் ஒன்று சேர்த்தவர் அய்யா வைகுண்டர். ஆண்கள் தலையில் தலைப்பாகையை அணிவித்து அனைவரும் கடவுளுக்கு முன் சமம் என்று கூறியவர். அதே போல தீண்டாமை எனும் தீமையை அகற்ற, தொட்டு நாமம் இடும் நிலையை உருவாக்கியவர் அய்யா வைகுண்டர்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கு விசாரணை – மார்ச் 9 வரை நீதிமன்ற காவல்!

இவருக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சாமித்தோப்பில் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல சென்னை, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் அய்யா வைகுண்டருக்கு ஆலயங்கள் உள்ளது. அய்யா வைகுண்டர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4ம் தேதியன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது உண்டு. அதே போல இந்த ஆண்டும் வரும் மார்ச் 4ம் தேதியன்று மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அளித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here