EPFO திட்ட கணக்கில் இந்த விதிமுறை நீக்கப்படுமா? வலுக்கும் கோரிக்கை!

0
EPFO திட்ட கணக்கில் இந்த விதிமுறை நீக்கப்படுமா? வலுக்கும் கோரிக்கை!
EPFO திட்ட கணக்கில் இந்த விதிமுறை நீக்கப்படுமா? வலுக்கும் கோரிக்கை!
EPFO திட்ட கணக்கில் இந்த விதிமுறை நீக்கப்படுமா? வலுக்கும் கோரிக்கை!

இந்தியாவில் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்களுக்கு EPFO அமைப்பு ஊழியர்களின் சேமிப்பு தொகையை பங்கு சந்தையில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த அமைப்பின் அடிப்படை விதிமுறை நீக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

EPFO கோரிக்கை

இந்தியாவில் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்கள் பெறும் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை அவர்களின் PF கணக்கின் கீழ் சேமிக்கப்படுகிறது. அதாவது EPFO நிறுவனத்தின் கீழ் PF கணக்கு தொடங்கப்பட வேண்டும். இந்நிறுவனம் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களை வழங்கி வருகிறது. ஆனால் இந்த பலன்களை விதிமுறைக்குட்ப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே பெற முடியும். அதாவது ஒரு நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்தால் மட்டுமே EPFO அமைப்பு மூலமாக சேவைகளை பெற முடியும்.

அத்துடன் ஊழியர் ஒருவர் ரூ.15000க்கு அதிகமாக சம்பளம் பெற்றால் மட்டுமே இந்த பலன்களை பெற முடியும். மேலும் இந்த 2 அடிப்படை விதிமுறைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே EPFO அமைப்பு மூலமாக பலன்கள் கிடைக்கும். இதில் ஒன்றை பூர்த்தி செய்யவில்லை என்றாலும் EPFO சேவைகளை பெற முடியாது. ஊழியர் ஒருவர் ரூ.15000த்திற்கு மேல் மாத சம்பளம் பெறுகிறார். ஆனால் அவர் 5 பேர் கொண்ட நிறுவனத்தில் பணிபுரிகிறார் எனில் அவரால் EPFO சேவைகளை பெற முடியாது. அதனால் இந்த அடிப்படை விதிமுறைகளை நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மத்திய அரசின் கீழ் பென்ஷன் பெறுபவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

அதன்படி இந்த அடிப்படை விதிமுறை நீக்கப்படுவதற்கு அரசு தரப்பில் ஒப்புதல் பெறப்பட்டால் அனைத்து வகையான ஊழியர்களும் EPFO அமைப்பின் கீழ் தங்களின் சேமிப்பு கணக்கை தொடங்குவார்கள். இதனால் EPFO அமைப்பின் கார்பஸ் பணமும் அதிகரிக்க தொடங்கும். மேலும் EPFO அமைப்பின் லாபமும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அத்துடன் EPFO அமைப்பின் சேவைகள் ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் சுயதொழில் புரிவோருக்கும் பலன்கள் கிடைக்கும். இதுவரை இந்நிறுவனத்தின் கார்பஸ் மதிப்பு சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் ஆக உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!