ஜூலை 19 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு? உ.பி., அரசுக்கு கோரிக்கை!

0
ஜூலை 19 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு? உ.பி., அரசுக்கு கோரிக்கை!
ஜூலை 19 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு? உ.பி., அரசுக்கு கோரிக்கை!
ஜூலை 19 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு? உ.பி., அரசுக்கு கோரிக்கை!

உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா புதிய பாதிப்புகள் அதிகளவு பதிவாகாத நிலையில், ஜூலை 19 ஆம் தேதி முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என தனியார் பள்ளி சங்கம் துணை முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளது.

பள்ளிகள் திறப்பு

நாடு முழுவதும் கொரோனா புதிய பாதிப்புகள் விகிதமானது தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. அதனால் மாநிலங்கள் தோறும் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து படிப்படியாக தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை ஏறத்தாழ அனைத்து மாநிலங்களிலும் அத்தியாவசிய சேவைகள் உட்பட போக்குவரத்து உள்ளிட்ட சேவைகளுக்கும் கூட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது உத்தரபிரதேச மாநிலத்திலும் கொரோனா புதிய பாதிப்புகள் சரிவை எட்டியுள்ளது.

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கம் – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

இதற்கிடையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் மீண்டுமாக பள்ளிகளை திறக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதாவது மாநிலம் முழுவதும் ஊரடங்கில் இருந்து அரசு தளர்வுகளை அறிவித்து வருவதை அடுத்து பள்ளிகளை திறக்க வேண்டும் என, அரசு உதவி பெறாத தனியார் பள்ளி சங்கம் (UPSA) மாநில துணை முதல்வர் தினேஷ் ஷர்மாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அந்த கோரிக்கை கடிதத்தில் ‘உத்திர பிரதேசத்தில் ஜிம்கள், மால்கள், திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள போது பள்ளிகளை திறப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரென விலகியது ஏன்? ஜெனிபர் பதில்!

மேலும் ஜூலை 19 ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கும், ஆகஸ்ட் 2 லிருந்து 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கும் பள்ளிகளை மீண்டும் திறக்குமாறு தனியார் பள்ளி சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக UPSA தலைவர் அனில் அகர்வால் கூறுகையில், கொரோனா தொற்றுநோய் காரணமாக பள்ளி மாணவர்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். அதனால் தொற்று குறைந்துள்ள இந்த காலகட்டத்தில் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை மீண்டும் திறக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here