பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க கோரிக்கை – போராட்டம் நடத்த முடிவு!
தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தற்போது வரையிலும் பணி நிரந்தரம் வழங்கப்படாத நிலையில் கோட்டையை முற்றுகையிட்டு பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
பகுதி நேர ஆசிரியர்கள்
தமிழகத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு 12,000 ஆசிரியர்கள் பகுதிநேர ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டனர். இந்த பகுதி நேர ஆசிரியர்களுக்கு மற்ற அரசு பள்ளி ஆசிரியர்களை போல போனஸ், பதவி உயர்வு போன்ற எந்த சலுகைகளும் வழங்கப்படுவதில்லை. இந்நிலையில், தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சியின் சார்பில் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
சென்னை மக்களுக்கான முக்கிய அறிவிப்பு – நாளை முதல் 2 நாட்களுக்கு குடிநீர் சப்ளை நிறுத்தம்!
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் வாக்குறுதியை நிறைவேற்றாத நிலையில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி கோட்டையை முற்றுகையிட்டு பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு தொகுப்பூதிய சம்பளமாக ரூ,10,000 மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில் அரசு தொகுப்பூதிய முறையை கைவிட்டு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.