இந்தியாவில் ஜன. 26 குடியரசு தினவிழா – நிகழ்ச்சிகளை காண டிக்கெட் புக் செய்யலாம்.. வழிமுறைகள் இதோ!

0
இந்தியாவில் ஜன. 26 குடியரசு தினவிழா - நிகழ்ச்சிகளை காண டிக்கெட் புக் செய்யலாம்.. வழிமுறைகள் இதோ!
இந்தியாவில் ஜன. 26 குடியரசு தினவிழா - நிகழ்ச்சிகளை காண டிக்கெட் புக் செய்யலாம்.. வழிமுறைகள் இதோ!
இந்தியாவில் ஜன. 26 குடியரசு தினவிழா – நிகழ்ச்சிகளை காண டிக்கெட் புக் செய்யலாம்.. வழிமுறைகள் இதோ!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் குடியரசு தினவிழா ஜன. 26ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவை நேரில் காண பொதுமக்கள் ஆன்லைன் வாயிலாக டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டும். இந்த டிக்கெட் பெறும் வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

ஆன்லைன் டிக்கெட்:

இந்தியாவில் குடியரசு தினவிழா ஜன. 26ம் தேதி அனைத்து மாநிலங்களிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். மற்ற இடங்களை தொடர்ந்து தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் மற்றும் பிற அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்படும். அந்த வகையில் 2023ம் ஆண்டு குடியரசு தின விழா கர்தவ்யா பாதையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சிகளை பொதுமக்கள் நேரில் காண ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் மூலமாக இந்த டிக்கெட்களை பெறுபவர் உத்யோக் பவன் மற்றும் மத்திய செயலகத்திற்கு காம்ப்ளிமெண்டரி மெட்ரோ ட்ரிப்களையும் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகளை புக் செய்யும் முறைகள் கீழ்வருமாறு:

  • முதலில் www.aamantran.mod.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
  • அதில் உங்களது மொபைல் எண்ணை பதிவிட்டு கேப்சா குறியீடை உள்ளிட வேண்டும்.
  • அடுத்து வரும் பக்கத்தில் உங்களின் தனிப்பட்ட விவரங்களை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.
  • மேலும் உங்களின் அடையாள சான்று பதிவேற்றம் செய்து உங்களின் மொபைல் எண்ணிற்கு வரும் OTP எண்ணை பதிவிட வேண்டும்.
  • இறுதியாக டிக்கெட் வகையை தேர்வு செய்து பணம் செலுத்த வேண்டும். டிக்கெட் விலையானது ரூ.20 முதல் ரூ.500 வரை உள்ளது.
  • மேற்சொன்ன நடைமுறைகளை நீங்கள் முடித்த பிறகு உங்களுக்கு ஒரு QR கோட் கிடைக்கும். அதனை குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வில் காட்ட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!