ரெப்போ வட்டி விகிதம் 4% ஆக நீட்டிப்பு, நடப்பு நிதியாண்டில் GDP வளர்ச்சி 9.5% – RBI கணிப்பு!

0
ரெப்போ வட்டி விகிதம் 4% ஆக நீட்டிப்பு, நடப்பு நிதியாண்டில் GDP வளர்ச்சி 9.5% - RBI கணிப்பு!
ரெப்போ வட்டி விகிதம் 4% ஆக நீட்டிப்பு, நடப்பு நிதியாண்டில் GDP வளர்ச்சி 9.5% - RBI கணிப்பு!
ரெப்போ வட்டி விகிதம் 4% ஆக நீட்டிப்பு, நடப்பு நிதியாண்டில் GDP வளர்ச்சி 9.5% – RBI கணிப்பு!

இந்தியாவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2021- 22ம் நிதியாண்டில் GDP வளர்ச்சி 9.5 சதவீதத்தை அடையும் என்றும், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4% ஆக தொடரும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வட்டி விகிதம்

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், இக்கூட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அந்த வகையில் நாணய கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சக்தி காந்த் தாஸ் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் கீழ், கடந்த 8 முறையாக மாற்றப்படாமல் இருந்து வரும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் அதே 4% த்துடன் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மிலாடி நபி கொண்டாடும் நாள் – தமிழக தலைமை காஜி அறிவிப்பு!

தொடர்ந்து எதிர்பார்க்கப்பட்டபடி, வங்கிகளுக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்திலும் எவ்வித மாற்றமும் அறிவிக்கப்படாமல் 3.35 சதவீதமாக தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகளில் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்கள் எவ்வித மாற்றமும் இல்லாமல் இன்னும் 2 மாதங்களுக்கு நீடிக்கும் என தெரிகிறது. அதனால் வீடு கட்டுவதற்காக வங்கி கடன்களை எதிர்பார்த்து காத்திருக்கும் நபர்கள் இந்த காலத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) செய்திக்குறிப்பு – தேர்வர்கள் கவனத்திற்கு!

இது தவிர வாகன கடன், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதமும் அதே நிலையில் இருக்கும். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர், ‘இந்தியாவில் 2021-22ம் நிதியாண்டில் GDP வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும். இந்த எண்ணிக்கை 2ம் காலாண்டில் 7.9 %வும், 3ம் காலாண்டில் 6.8%வும், 4ம் காலாண்டில் 6.1 %வும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பணவீக்கம் 5.3% ஆக இருக்கும். தொடர்ந்து 2022- 23ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் GDP வளர்ச்சி 17.2 % ஆகவும், பணவீக்கம் 5.2% ஆக இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!