நவ.1ம் தேதி 1 முதல் 7ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

0
நவ.1ம் தேதி 1 முதல் 7ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு - புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
நவ.1ம் தேதி 1 முதல் 7ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு - புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
நவ.1ம் தேதி 1 முதல் 7ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

கேரளா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து வரும் நவம்பர் 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

புதிய வழிகாட்டுதல்கள்:

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் கேரளா மாநிலத்தில் மட்டும் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வந்தது. இதனால் தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தற்போது கேரளா மாநிலத்தின் தினசரி பாதிப்பு 12,000 என்ற அளவை எட்டியுள்ளது. பாதிப்புகள் குறைந்து வருவதால் மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து அரசு ஆலோசித்து வந்தது. தொடர்ந்து கல்வி துறையின் ஆலோசனைக்கு பிறகு நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.

உள்ளாட்சி தேர்தலை ஒட்டி பொறியியல் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை – அண்ணா பல்கலை அறிவிப்பு!

மேலும், பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்து விரிவான ஏற்பாடுகளை மாநில கல்வித்துறை தொடங்கியது. பள்ளிகளில் நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்குவதற்கு முன்னதாக, நோய் தடுப்பு தொடர்பான விரிவான வழிகாட்டுதல்கள் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அம்மாநில கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி அறிவித்திருந்த நிலையில் இன்று வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அக்டோபர் 4ம் தேதி முதல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டது. மேலும், அடுத்த வரம் முதல் 2ம் ஆண்டு மாணவர்களுக்கும் கல்லூரி திறக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சரவண விக்ரம் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் ஆன கதை – என்ஜினீயர் டூ நடிகர்!

அரசின் அறிவிப்பின் படி, வரும் 1ம் தேதி முதல் 1 முதல் 7ம் வகுப்புகள் மற்றும் 10, 12 வகுப்புகளுக்கும், 8, 9, 11 வகுப்புகளுக்கு நவம்பர் 15 ம் தேதி முதலும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும். அரசின் அறிவிப்பின் படி, 1 முதல் 7 வகுப்புகளில் ஒரு வகுப்பறையில் அதிகபட்சமாக 10 மாணவர்களையும், 8ம் வகுப்புக்கு மேல் 20 மாணவர்களையும் அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப பள்ளி மாணவர்கள் ஒரு பெஞ்சில் 1 மாணவரும், 8ம் வகுப்பிற்கு மேல் ஒரு பெஞ்சில் 2 மாணவர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அனைத்து வகுப்புகளுக்கும் மதியம் வரை மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என்றும், சனிக்கிழமையும் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here