EPFO வங்கி விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்கும் வழிமுறைகள் – PF கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

0
EPFO வங்கி விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்கும் வழிமுறைகள் - PF கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!
EPFO வங்கி விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்கும் வழிமுறைகள் - PF கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!
EPFO வங்கி விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்கும் வழிமுறைகள் – PF கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

வருங்கால வைப்பு நிதி அமைப்பானது, அதன் பயனர்கள் தங்கள் கணக்கின் விவரங்களை ஆன்லைனில் மாற்றுவதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. ஆன்லைன் சேவைக்கான எளிய வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

ஆன்லைன் சேவை:

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது வடிக்கையாளர்களுக்கு பல சிறப்பு அம்சங்களை வழங்கியுள்ளது. ஊழியர்கள் தங்கள் பணிக்காலம் முடியும் போது அல்லது பணியில் இருந்து விலகும் போது அந்த வைப்பு தொகையை பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு பயனருக்கும் தனிப்பட்ட UAN எண் கொடுக்கப்பட்டிருக்கும். ஊழியர்களின் குடும்பத்தில் ஏதேனும் அவசர தேவை இருப்பின் வைப்புத் தொகையில் இருந்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம். ஊழியர்கள் வீட்டுக்கடன், குடும்ப உறுப்பினரின் நோய், திருமணம், குழந்தைகளின் கல்வி மேலும் இது போன்ற பல தேவைகளுக்காக உதவித்தொகையையும் வழங்கி வருகிறது.

CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்வது எப்படி?

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பயனர்கள் தங்கள் விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்க அனுமதி அளித்துள்ளது. இந்த சேவையைப் பெற, கணக்குதாரர்கள் தங்கள் யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) வைத்திருக்க வேண்டும். UAN, PF கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் ஓய்வூதிய நிதி விவரங்களையும் அதில் அறிந்து கொள்ளலாம். PF கணக்கின் பரிவர்த்தனைகளையும் புதுப்பிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. EPF சந்தாதாரர்கள் இந்த முறையைப் பயன்படுத்தி தங்கள் வீட்டில் இருந்தபடியே தங்கள் வங்கி விவரங்களை எளிதாக மாற்றலாம்.

ஆன்லைனில் PF கணக்கின் வங்கி விவரங்களை புதுப்பிக்கும் வழிமுறைகள்:
  • EFPO இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று தேவையான விவரங்களை சமர்ப்பித்து உள்ளே செல்ல வேண்டும்.
  • அதன் மெனுவில் உள்ள ‘Manage’ என்ற தேர்வை தேர்வு செய்ய வேண்டும்.
  • அப்போது, கீழே தோன்றும் மெனு பகுதியில் ‘KYC’ யை கிளிக் செய்து அதில் ‘Bank’ என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • அந்த பகுதியில், வங்கி கணக்கு எண் மற்றும் IFSC குறியீடு உட்பட புதிய வங்கி விவரங்களை உள்ளிட வேண்டும்.
  • இப்போது ‘சேமி’ என்பதைக் கிளிக் செய்து, இந்த பகுதியின் கீழ் உங்கள் விவரங்கள் காண்பிக்கப்படும்.
  • தேவையான ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். வங்கி டிஜிட்டல் முறையில் சரிபார்ப்பை மேற்கொள்ளும்.
  • அதன் பிறகு, டிஜிட்டல் முறையில் அங்கீகரிக்கப்பட்ட KYCக்கு உங்கள் சேவை புதுப்பிக்கப்படும்.
  • வங்கி விவரங்கள் நீங்கள் பணியாற்றும் நிறுவனம் அல்லது எஸ்பிஐ மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு EPFO உறுதிப்படுத்தல் செய்தியை உங்களுக்கு அனுப்பி வைக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!