ரயில்வே தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – புதுப்பிக்க மீண்டும் வாய்ப்பு!

0
ரயில்வே தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - புதுப்பிக்க மீண்டும் வாய்ப்பு!
ரயில்வே தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - புதுப்பிக்க மீண்டும் வாய்ப்பு!
ரயில்வே தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – புதுப்பிக்க மீண்டும் வாய்ப்பு!

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி அன்று ரயில்வே பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிப்புகள் வெளியானது. இதில் தவறாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்தவர்களுக்கு தற்போது புதுப்பித்து கொள்ள ஓர் வாய்ப்பை ரயில்வே வாரியம் வழங்கி உள்ளது.

ரயில்வே தேர்வு

கொரோன கால கட்டத்தில் அனைத்து அரசு போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. அதற்கு முன்பு ரயில்வே வாரியம் பொறியியல், இயந்திரவியல், மின்சாரம், தொலைத்தொடர்பு, மருத்துவமனை, பணிமனை ஆகிய பிரிவுகளில் உதவியாளர், ரயில் பாதை பராமரிப்பு பணியாளர் போன்ற பணிகளுக்கான ரயில்வே பணியாளர் தேர்வினை அறிவித்தது. இத்தேர்வுக்கு லட்சக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்கள் சிலவற்றில் தவறுதலாக போட்டோ, கையெழுத்து இருப்பதனால் அதனை ரயில்வே வாரியம் நிராகரித்தது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – அதிமுக போராட்டம்!

இவ்வாறு தவறாக அனுப்பிய விண்ணப்பதாரர்களுக்கு புதுப்பித்து கொள்ள ஓர் வாய்ப்பை ரயில்வே வாரியம் வழங்கியுள்ளது. இதற்காக அதிகாரப்பூர்வ ரயில்வே தேர்வாணைய இணையதளங்களில் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் ஒரு இணையதள இணைப்பினை வழங்க உள்ளது. அதன் மூலம் தங்களது சரியான போட்டோ, கையெழுத்து உள்ளிட்டவற்றை புதுப்பித்து கொள்ளலாம். மேலும் தங்களது விண்ணப்பங்கள் ஏற்கபட்டதா என்பதை உறுதி செய்து கொள்ள ரயில்வே தேர்வு ஆணைய இணையதளத்தில் சென்று பார்க்க வேண்டும். இந்த இணையத்தளத்தில் விண்ணப்பதாரர்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.

டிச.25ம் தேதியன்று முழு ஊரடங்கு அமல்? இன்று அறிவிப்புகள் வெளியீடு!

ஒரு முறை ஏற்கப்பட்ட விண்ணப்பங்களை மீண்டும் சமர்ப்பிபதற்கு தேவையில்லை. விண்ணப்பதாரர்கள் அனைவரும் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அதனால் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வமற்ற இடைத்தரகர்களை தொடர்பு கொண்டு ஏமாற வேண்டாம். மேலும் ரயில்வே தேர்வு குறித்த அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வ ரயில்வே தேர்வாணைய இணையதளங்களில் மட்டுமே வெளியிடப்படும். அதனால் சமூக வலைதளங்களில் வரும் அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!