தமிழகத்தில் உப்பள தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 5000 நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் உப்பள தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 5000 நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் உப்பள தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 5000 நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு!தமிழகத்தில் உப்பள தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 5000 நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் உப்பள தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 5000 நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள உப்பளங்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கிவைத்தார். மேலும் இதன் அடையாளமாக 5 பேருக்கு காசோலைகளை முதல்வர் வழங்கினார்.

நிவாரண திட்டம்:

தமிழகத்தில், தூத்துக்குடி, வேதாரண்யம், மரக்காணம் என 10 கடலோர மாவட்டங்களில் 43,174 ஏக்கர் நிலத்தில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த உப்பள தொழிலில் ஏறத்தாழ ஒரு லட்சம் தொழிலாளர்கள் நேரடியாக ஈடுபடுகின்றனர். இந்த உப்பள தொழிலானது ஆண்டின் மழைக்காலத்தைத் தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் நடைபெறும். இந்த வேலையானது அதிகமான வேலை பளு உடையது. மேலும், மழைக்காலங்களில் சேதமடைந்த உப்பளத்தினை திருத்தி உப்பு உற்பத்திக்கு தயார் செய்ய வேண்டும்.

TNPSC தேர்வர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!!!!

அதற்கு 4 முதல் 6 வாரம் வரை ஆகும். உப்பு உற்பத்தியில் கிடைக்கும் உபபொருளான ஜிப்சம் இந்த பணிகளின் பொழுதே எடுக்கப்படுகிறது. அந்த நேரத்தில் தொழிலாளர்களுக்கு உப்பு உற்பத்தியின் பொழுது வழங்கும் கூலியை விடக் குறைவான கூலியே வழங்கப்படுகிறது. அதனால் இந்த தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் பெரும் சிரமத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக இருக்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் நாளை (ஆக.13) எந்தெந்த பகுதிகளில் மின்தடை? முழு லிஸ்ட் இதோ!

அதன் படி உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். இந்த திட்டத்தை தொடங்கிவைக்கும் அடையாளமாக 5 பேருக்கு காசோலைகளை வழங்கினார். மேலும் தமிழ்நாடு உப்பு நிறுவனம் சார்பில் நெய்தல் உப்பு பெயரில் வெளிச்சந்தையில் உப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணம் உப்பள தொழிலார்களின் குடும்பத்திற்கு நல்ல உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!