தமிழக தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நிவாரண நிதி – அரசுக்கு கோரிக்கை!!

0
தமிழக தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நிவாரண நிதி - அரசுக்கு கோரிக்கை!!
தமிழக தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நிவாரண நிதி - அரசுக்கு கோரிக்கை!!
தமிழக தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நிவாரண நிதி – அரசுக்கு கோரிக்கை!!

கொரோனா பரவல் காரணமாக தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் மறுக்கப்பட்டுள்ளது. எனவே அரசு நிவாரண தொகை அளிக்க வேண்டும் என தனியார் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிவாரணத்தொகை :

தமிழகம் முழுவதும் கடந்த 1 வருடங்களாகவே கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகம் ஊதியம் தர மறுக்கிறது. தொடந்து வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. அதற்கு சில பள்ளிகள் ஆசிரியர்களுக்கு பாதி ஊதியம் அளித்து வருகிறது. பள்ளிகள் இல்லாததால் பெற்றோர்கள் பள்ளி கட்டணத்தை தர மறுக்கின்றனர். இதனால் தனியார் பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களுக்கு ஊதியம் அளிக்க முடியாத நிலையில் உள்ளது.

5 கோடி தடுப்பூசி டோஸ்கள் ஜூன் 15 வரை இலவசம் – மத்திய அரசு அறிவிப்பு!!

இதனால் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தனியார் பள்ளி ஆசிரியர்கள் தவித்து வருகின்றன. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கத்தினர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர். எனவே ஊதியமின்றி தவிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

மேலும் தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும். அதன் மூலம் அவர்களது குறைகள் நிவர்த்தி செய்ய வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் கல்வித்தகுதி, அனுபவம் அடிப்படையில் முறையான ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். கொரோனா காலத்தில் பள்ளி, கல்லூரிகள் தரப்பில் தானாகவே விடுப்பு வழங்கி பிடித்தம் செய்யப்பட்ட ஊதிய தொகையை ஆசிரியர்களுக்கு தாமதமின்றி வழங்க அரசு தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்