கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடன் – எஸ்பிஐ புதிய அறிவிப்பு!

0
கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ
கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூகோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ

கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடன் – எஸ்பிஐ புதிய அறிவிப்பு!

எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு கொரோனா காலத்தில் உதவிகரமான கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த தனிநபர் கடனை பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் எந்த சொத்து மதிப்பும் சமர்ப்பிக்க தேவையில்லை.

தனிநபர் கடன்:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்பு மக்களிடையே அதிக அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவமனைகளில் நல்ல நவீன முறையிலான மருத்துவ சிகிச்சைகள் செய்து வரும் போதிலும், போதிய இடவசதி காரணமாக பலரும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுக்கும் நிலையில் உள்ளனர். தனியார் மருத்துவமனைகளோ கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணத்தை வசூலித்து வருகிறது. இதனால் மக்கள் சிகிச்சை செலவிற்காக தவிக்கும் சூழ்நிலையில், எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு ‘கவச் தனிநபர் கடன்’ திட்டத்தை அறிமுகக்கப்படுத்தி உள்ளது.

இரவு 10 மணிக்கு மேல் கடைகள், உணவகங்கள் திறந்திருக்க அனுமதி – அரசு அறிவிப்பு!

அதன் படி, கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் சிகிச்சைக்காக இந்த திட்டத்தின் மூலம் கடன் உதவி செய்யப்படுகிறது. 5 லட்சம் வரையிலான  கடன் தொகை 5 வருட காலத்திற்கு 8.5 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கடன் பெறுவதற்கு எந்தவொரு சொத்து பத்திரமும் சமர்ப்பிக்க தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் குறைந்த பட்ச தொகையாக ரூ .25,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம் – அமைச்சர் பேட்டி!

ஏப்ரல் 1, 2021 முதல் கொரோனா தொற்று பாதித்த ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு மாத ஊதியம் பெறுபவர் மற்றும் மாத ஊதிய திட்டத்தில் இல்லாதவர்களும் கடன் பெறலாம். முன்னதாக வாடிக்கையாளர்களுக்கு கடன் இருந்தாலும் மேலும், இந்த திட்டத்தில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் எந்த செயலாக்க கட்டணமும் இல்லாமல் கடன் பெறும் வசதி உள்ளதாகவும், எஸ்பிஐ-யின் எந்த கிளையின் மூலம் மற்றும்  யோனோ மொபைல் செயலி மூலம் முன் ஒப்புதல் பெற்று கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!