Reliance Jio வழங்கும் Disney + Hotstarன் இலவச சந்தா – ரீசார்ஜ் திட்டங்கள் விளக்கம்!

0
Reliance Jio வழங்கும் Disney + Hotstarன் இலவச சந்தா - ரீசார்ஜ் திட்டங்கள் விளக்கம்!
Reliance Jio வழங்கும் Disney + Hotstarன் இலவச சந்தா - ரீசார்ஜ் திட்டங்கள் விளக்கம்!
Reliance Jio வழங்கும் Disney + Hotstarன் இலவச சந்தா – ரீசார்ஜ் திட்டங்கள் விளக்கம்!

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, சிறந்த ரீசார்ஜ் திட்டங்களுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சேவையின் இலவச சந்தா போன்ற சில கூடுதல் சலுகைகளை அளிக்கிறது. இது தொடர்பிலான கூடுதல் விவரங்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

ரீசார்ஜ் திட்டம்

சமீபத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவின் செயல்பாடுகளில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த செயல்பாடுகள் இம்மாதம் முதல் அமலுக்கு வருகிறது. புதிய சந்தாவில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பயனர்கள் இப்போது ரூ.100 அதிகமாக செலுத்தி VIP சந்தாவிற்கான செயல்பாடுகளை அனுபவிக்க முடியும். இந்த சிரமங்கள் எதுவும் இல்லாமல் ஜியோ தரும் சில ரீசார்ஜ் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும். அந்த வகையில் ஜியோவின் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தை பயன்படுத்தி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் இலவச சந்தாவை பயன்படுத்த முடியும்.

இந்தியாவில் 30 லட்சம் WhatsApp கணக்குகள் முடக்கம் – அதிகாரபூர்வ அறிவிப்பு!

இந்த ரீசார்ஜ் திட்டமானது இன்று (செப்டம்பர் 1) முதல் பயன்பாட்டுக்கு வரும் நிலையில், ஜியோ வாடிக்கையாளர்கள் தற்போது உபயோகிக்கும் ரீசார்ஜ் திட்டங்களிலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா காலியாகும் வரையில் அனுபவிக்கலாம். தற்போது ரூ.499 க்கான ஜியோ ப்ரீபெய்ட் திட்டம், தினசரி 3 GB டேட்டாவுடன், 100 SMS மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சேவைகளை 28 நாட்கள் வரை கொடுக்கப்படுகிறது. இது தவிர ஜியோவின் மேலும் சில ரீசார்ஜ் திட்டங்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சேவைகளின் இலவச சந்தாவை தருகிறது.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் ரூ.2,599க்கான திட்டம், ஒரு நாளைக்கு 2 GB யுடன் மொத்தம் 740 GB டேட்டாக்களை கொடுக்கிறது. தவிர ரூ.666க்கான ரீசார்ஜ் திட்டம் தினசரி 2 GB டேட்டாவுடன் 100 SMS மற்றும் இலவச கால்ஸ் உடன் 56 நாட்கள் வரை செல்லுபடியாகிறது. ரூ.888 க்கான திட்டம் தினசரி 2 GB டேட்டாவுடன் 100 SMS மற்றும் இலவச கால்ஸ் உடன் 3 மாதங்கள் வரை செல்லுபடியாகிறது. மேற்குறிப்பிட்ட திட்டங்கள் அனைத்தும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சேவையின் இலவச சந்தாவை அளிக்கிறது. குறிப்பாக இந்த இலவச சேவைகளை பயனர்கள் ஒரு சாதனத்தில் மட்டும் ஸ்டீரியோ ஆடியோ தரம் மற்றும் 720p வீடியோ தரத்துடன் உபயோகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!