Reliance Jio அதிரடி நன்மைகளை அளிக்கும் புதிய பிளான் – முழு விவரம் இதோ!
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சிம் பயனர்களுக்கு அந்த நிறுவனம் ஒரு புதிய அதிரடி பலன்கள் நிறைந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அந்த திட்டத்தில் உள்ள நன்மைகளை பற்றிய விவரங்களை இந்த பதிவில் காண்போம்.
புதிய திட்டம்:
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பலருக்கும் வேலைவாய்ப்புகள் பறிபோனது. பல தொழிலகங்கள் மூடப்பட்டது. தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் வீடுகளில் இருந்து வேலை பார்க்கும் முறையில் பணியாற்றி வருகின்றனர். இதனால் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அறிவித்து வருகின்றது.
ரேஷன் கார்டில் இல்லத்தரசியின் புகைப்படம் இருந்தால் தான் ரூ.1000 ஆ? முழு விவரம் இதோ!
இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒரு வருடத்திற்கான புதிய ப்ரீபெய்ட் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. ஒரு வருடத்திற்கு ரூ.3,499 க்கு ரீசார்ஜ் செய்யும் இந்த திட்டமானது நிறுவனத்தின் வலைத்தளம் மற்றும் மொபைல் ஆப் இரண்டிலும் உள்ளது. இதில் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தற்போது டெல்கோ வழங்கும் மிகவும் அதிக விலையிலான திட்டமாக இந்த திட்டம் உள்ளது. இந்த புதிய திட்டத்தில் ரூ.3,499 க்கு ரீசார்ஜ் செய்தால், ஒரு வருடத்திற்கு அதாவது 365 நாட்களுக்கும் தினமும் 3 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
TN Job “FB
Group” Join Now
இதன் மொத்த அளவு 1,095 ஜிபி யாக உள்ளது. 3 ஜிபி டேட்டா முடிந்த பிறகு ப்ரவுஸிங் வேகம் 64 கே.பி.பி.எஸ் ஆக குறைகிறது. மேலும், வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ்.,களும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதனுடன், JioTV, JioCinema, JioNews, JioSecurity மற்றும் JioCloud ஆகிய பலன்கள் இலவசமாக கிடைக்கிறது. ஆனால், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜீ 5 போன்ற எந்த விதமான மற்ற OTT தளத்திற்குமான இலவச அணுகல் இந்த திட்டத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.