அரசுப் பணிகளில் நியமனம் செய்யப்படுவோர் கவனத்திற்கு – முக்கிய தகவல் வெளியீடு!

0
அரசுப் பணிகளில் நியமனம் செய்யப்படுவோர் கவனத்திற்கு - முக்கிய தகவல் வெளியீடு!
அரசுப் பணிகளில் நியமனம் செய்யப்படுவோர் கவனத்திற்கு - முக்கிய தகவல் வெளியீடு!
அரசுப் பணிகளில் நியமனம் செய்யப்படுவோர் கவனத்திற்கு – முக்கிய தகவல் வெளியீடு!

தமிழகத்தில் அரசு துறைகளில் உயர் பதவிகளில் பணி பெற்றுத் தருவதாக கூறி பலர் லஞ்சம் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக ஜெகன்நாதன், இந்துமதி உள்ளிட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருப்பதை பற்றி பார்ப்போம்.

அரசு பணிகள்

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டித்தேர்வுகளில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பதவிகளில் பணியமர்த்தப்படுவார்கள். ஆனால் தற்போது அரசு பதவிகளில் உயர் பதவிகளில் நியமனம் பெற்றுத் தருவதாக கூறி லட்சக்கணக்கான பணம் லஞ்சமாக பெற்று பலர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. அத்துடன் தேர்வு முறைகளில் மிகவும் நம்பகத்தன்மை கொண்டதாக நடத்தப்பட்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

இந்த நிலையில் அரசு துறைகளில் உயர் பதவிகளில் நியமனம் பெற்று தருவதாக கூறி ஜெகநாதன், இந்துமதி உள்ளிட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது. இவர்கள் கிளாஸ் 1 பதவிகளுக்கு 78 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாக தெரிய வந்தது. இதில் தான் வழங்கிய பணத்தில் இருந்து 10 லட்ச ரூபாய் திரும்ப தருமாறு பூந்தமல்லி நீதிமன்றத்தில் சடகோபன் என்பவர் மனு தாக்கல் செய்தார். ஆனால் புலன் விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருந்ததால் பணத்தை வழங்க மறுத்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

TNPSC மூலமாக ஆவின் நிறுவனத்திற்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் – அமைச்சர் அறிவிப்பு!

இதற்கெதிராக மனுதாரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி பரத சக்கரவர்த்தி கூறியிருப்பதாவது, மனுதாரர் இந்த வழக்கு முடிவடையும் வரை காத்திருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார். அத்துடன் தனக்கு உயர் பதவி வேண்டுமென்று லஞ்சம் கொடுத்திருப்பதால் இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. அத்துடன் இது அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை மிகவும் பாதிக்கும் என்றும் அரசு பதவிகளில் தேர்வு மூலமாக மட்டுமே ஆட்சேர்ப்பு நடைபெறும் என்றும் கூறியுள்ளார். மேலும் லஞ்சம் கொடுத்து எந்த அரசு பதவியையும் பெற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!