தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – புதிய கல்வியாண்டிற்கான நாட்காட்டி வெளியீடு!

0
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - புதிய கல்வியாண்டிற்கான நாட்காட்டி வெளியீடு!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - புதிய கல்வியாண்டிற்கான நாட்காட்டி வெளியீடு!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – புதிய கல்வியாண்டிற்கான நாட்காட்டி வெளியீடு!

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இன்று (ஜூன்.13) முதல் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கி இருக்கும் நிலையில், தற்போது ஜூன் முதல் ஏப்ரல் மாதம் வரையுள்ள கல்வி நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி நாட்காட்டி

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நிலவும் கொரோனா நோய்த்தொற்று சூழலுக்கு மத்தியில் முழுமையான முறையில் பள்ளிகள் எதுவும் திறக்கப்படவில்லை. இதற்கிடையில் இந்த ஆண்டு கொரோனா 3ம் அலைத்தொற்று ஓய்ந்து வந்ததற்கு பிறகு 1 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் பிப்ரவரி 1ம் தேதி முதற்கொண்டு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு வழக்கமான முறையில் ஆப்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு கடந்த மே 14ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் 2022-23ம் கல்வியாண்டுக்கான புதிய வகுப்புகள் இன்று (ஜூன் 13) முதல் துவங்கி இருக்கிறது. அந்த வகையில் LKG முதல் 12ம் வகுப்பு வரையுள்ள அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இன்று நேரடி வகுப்புகள் ஆரம்பமாகி உள்ளது. இப்போது புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் தினசரி காலை 9.10 மணியளவில் துவங்கி 4.10 மணிவரை 8 பாடவேளைகளாக 7 மணிநேரத்திற்கு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்கான அட்டவணையும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான எண்ணும், எழுத்தும் கற்றல் திட்டம் – தொடங்கி வைக்கிறார் முதல்வர் !

இதனுடன் இன்று (ஜூன் 13) முதல் மீண்டுமாக அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் புதிய வகுப்புகளுக்கான பாட புத்தகங்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் தற்போது துவங்கி இருக்கும் 2022-23ம் கல்வியாண்டுக்கான பள்ளி நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்காட்டியில் 2022 ஜூன் முதல் 2023 ஏப்ரல் மாதம் வரையுள்ள விடுமுறை தினங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இப்போது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள விடுமுறை நாட்காட்டி விவரங்களை https://drive.google.com/file/d/1_rneZgZB50r0uToEbqaKD7dVi7JsjbgP/view என்ற இணைப்பின் மூலம் தெரிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!