தமிழகத்தில் ஜூன் 21க்கு பின் ஊரடங்கில் எதற்கெல்லாம் அனுமதி? இன்று வெளியாகும் அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஜூன் 21க்கு பின் ஊரடங்கில் எதற்கெல்லாம் அனுமதி? இன்று வெளியாகும் அறிவிப்பு!
தமிழகத்தில் ஜூன் 21க்கு பின் ஊரடங்கில் எதற்கெல்லாம் அனுமதி? இன்று வெளியாகும் அறிவிப்பு!
தமிழகத்தில் ஜூன் 21க்கு பின் ஊரடங்கில் எதற்கெல்லாம் அனுமதி? இன்று வெளியாகும் அறிவிப்பு!

தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் முழு ஊரடங்கு உத்தரவானது ஜூன் 21ஆம் தேதியுடன் முடிவடைவதால், அதற்கு பிறகு சில முக்கிய தளர்வுகள் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அதிகாரிகளுடன் இன்று (ஜூன் 19) ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

முழு ஊரடங்கு

கொரோனா 2 ஆம் அலை பரவல் எதிரொலியாக தமிழகத்தில் மே 10 முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவானது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு, கடந்த 2 வாரங்களாக தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜூன் 21 ஆம் தேதியுடன் தற்போதுள்ள முழு ஊரடங்கு உத்தரவானது முடிவடையும் என்பதால், தமிழகத்தில் மேலும் சில தளர்வுகள் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஜூன் 21 க்கு மேல் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில், மருத்துவ வல்லுநர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் இன்று (ஜூன் 19) நடைபெறுகிறது.

நாடு முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறப்பு எப்போது? அரசு விளக்கம்!

இந்த ஆலோசனை கூட்டத்துக்குப் பின்னர், ஊரடங்கு குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் கொடுக்கப்படும் என்ற அடிப்படையில், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்படலாம் எனவும் மற்ற 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் கொடுக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதன் படி கொரோனா தினசரி பாதிப்பு குறைவாக உள்ள சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களிலும், மாவட்டத்துக்குள் செல்லும் அரசு பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் திறக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் மத வழிபாட்டுத் தலங்கள் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பின்பற்றி திறக்கப்படலாம். இது தவிர கடைகள் செயல்படும் நேரங்களில் சில கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படலாம். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் இன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!