JEE தேர்வர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விதிமுறைகளை தளர்த்த அரசு முடிவு? வெளியான முக்கிய தகவல்!
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் JEE நுழைவுத் தேர்வில் சில விதிமுறைகளை தளர்த்த வலியுறுத்தி மாணவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சகம் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
JEE நுழைவுத்தேர்வு:
இந்தியாவில் உள்ள மத்திய தொழில்நுட்ப கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு JEE எனும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் இத்தேர்வை எழுத தகுதியானவர்கள்.இத்தேர்வானது 2 கட்டங்களாக நடத்தப்படும். முதல் கட்டமாக முதன்மை தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்ட JEE அட்வான்ஸ் தேர்வில் பங்கேற்க முடியும்
தமிழகத்தில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் – உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!
Follow our Instagram for more Latest Updates
2023 ஆம் ஆண்டுக்கான JEE நுழைவுத்தேர்வுக்கு தற்போது ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் JEE நுழைவுத்தேர்வு எழுதுவதற்கு உள்ள சில விதிகளை தளர்த்த வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதாவது தற்போது ஜேஇஇ தேர்வு எழுத மாணவர்கள் 12ம் வகுப்பில் குறைந்தபட்சம் 75% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.
இந்த விதிமுறையை தளர்த்த கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மாணவ பிரதிநிதிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனையடுத்து கல்வி அமைச்சகம் 12ம் வகுப்பில் 75% பெறாத மாணவர்களையும் தேர்வு எழுத அனுமதிப்பது குறித்து முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து JEE தேர்வுக்கான விதிகளை தளர்த்துவது குறித்து கல்வித்துறை ஆலோசித்து வருவதாக மத்திய கல்வி அமைச்சர் அமைச்சர் தெரிவித்துள்ளார்.