Reliance Jio வின் அதிரடி ஆஃபர் – ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’!

0
Reliance Jio வின் அதிரடி ஆஃபர் - 'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்'!
Reliance Jio வின் அதிரடி ஆஃபர் - 'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்'!
Reliance Jio வின் அதிரடி ஆஃபர் – ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’!

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான Reliance Jio அவ்வப்போது பல்வேறு ஆஃபர் மூலம் பயனர்களை குஷிப்படுத்தி வருகிறது. தற்போது ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என ரூ.200க்கு குறைவான அசத்தலான திட்டங்களை வெளியிட்டு உள்ளது. ஜியோ போனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆஃபர் பொருந்தும்.

அதிரடி ஆஃபர்:

ஜியோ நிறுவனம் மூலம் அறிமுகமான ஜியோ போனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இரட்டிப்பு சலுகைகளுடன் ஆஃபர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் 200 ரூபாய்க்கும் குறைவான திட்டங்களாகும். ரூ.39, ரூ.69, ரூ.75, ரூ.125, ரூ.155 மற்றும் ரூ.185 போன்ற திட்டங்களை பயன்படுத்துபவர்களுக்கு இந்த ஆஃபர் வழங்கப்படுகிறது. ரூ.39 திட்டத்தில் மெசேஜ் வசதி தவிர்த்து அன்லிமிடெட் கால் மற்றும் நாள் ஒன்றுக்கு 100 MB டேட்டா என வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நாள் ஒன்றுக்கு 200 MB டேட்டா 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை விரைவில் பள்ளிகள் திறப்பு – ஆசிரியர்கள் வருகை!

இதனை தொடர்ந்து ரூ.69 திட்டத்தின் கீழ் மெசேஜ் வசதி இன்றி 0.5 GB டேட்டாவை பெற்று வந்த நிலையில், தற்போது 1 GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால் ஆகியவற்றை 14 நாட்களுக்கு பெற்றுக் கொள்ள முடியும். அதே போல் ரூ.75 திட்டத்தில் இலவச அழைப்புகளுடன் 3GB டேட்டா வழங்கி வந்த ஜியோ நிறுவனம் தற்போது ஆஃபர் அடிப்படையில் 6GB டேட்டா வழங்கி வருகிறது. மேலும் இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். ரூ.125 திட்டத்தின் கீழ் இலவச அழைப்புகளை ஏற்கும் வசதியுடன் நாள் ஒன்றுக்கு 0.5 GB டேட்டா வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஆஃபர் அடிப்படையில் 28 நாள் வேலிடிட்டியுடன் 1 GB டேட்டா வழங்கி வருகிறது.

TN Job “FB  Group” Join Now

ரூ.155 திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் அழைப்புகளை ஏற்கும் வசதியுடன் நாள் ஒன்றுக்கு 1 GB டேட்டாவும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற ஆஃபர் அடிப்படையில் இரட்டிப்பாக்கப்பட்டு 28 நாட்கள் வேலிடிட்டியுடன் 2 GB டேட்டா வழங்கப்படுகிறது. இதனை அடுத்த ரூ.185 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 GB டேட்டாவுடன் அன்லிமிடெட் அழைப்புகளை செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டது. அதனை இரட்டிப்பாக்கி நாள் ஒன்றுக்கு 4 GB டேட்டா வழங்குவதாக தனது ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் ஆஃபரில் அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!