அண்ணா பல்கலை மாணவர்களுக்கு ஷாக் அறிவிப்பு – நேரடி முறையில் தேர்வு! முழு விபரம் இதோ!

0
அண்ணா பல்கலை மாணவர்களுக்கு ஷாக் அறிவிப்பு - நேரடி முறையில் தேர்வு! முழு விபரம் இதோ!
அண்ணா பல்கலை மாணவர்களுக்கு ஷாக் அறிவிப்பு - நேரடி முறையில் தேர்வு! முழு விபரம் இதோ!
அண்ணா பல்கலை மாணவர்களுக்கு ஷாக் அறிவிப்பு – நேரடி முறையில் தேர்வு! முழு விபரம் இதோ!

தமிழக அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் கல்லூரி மாணவர்களில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு துறையினருக்கு மட்டும் செமஸ்டர் தேர்வு நேரடி முறையில் நடைபெறும், மற்ற துறையினருக்கு ஆன்லைன் முறையில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் கல்லூரி மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

செமஸ்டர் தேர்வு அறிவிப்பு:

தமிழகத்தில் பொது மக்கள் அனைவரையும் அதிக அச்சத்தில் ஆழ்த்தியது கொரோனா என்ற நோய் தொற்று. இந்த தொற்று காரணமாக அதிக பொருளாதார வீழ்ச்சி, பள்ளி கல்லூரிகள் மாணவர்களுக்கு விடுமுறை என அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் காரணமாக மூடப்பட்ட பள்ளி கல்லூரிகள் பிப்ரவரி 1 முதல் திறக்கப்பட்டன. இந்த வகையில் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடைபெற உள்ளன. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 420 கல்லூரிகள் செயல்படும் நிலையில், அதில் லட்சக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

5 வது முறை உலக கோப்பையை வெல்லுமா இந்திய U19 அணி? இன்று பைனலில் இங்கிலாந்துடன் மோதல்!

இந்த வகையில் கொரோனா எழுச்சியை கட்டுப்படுத்தும் விதமாக கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஒரு சில துறையை சேர்ந்தவர்களுக்கு மட்டும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடத்த இருப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டதாக முதுகலை மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பால் MBA மற்றும் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பிப்ரவரி மாதம் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை – முக்கிய காரணம் இதோ!

இந்த வகையில் கொரோனா பாதிப்பால் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள மாணவர்களுக்கு அதிக குழப்பங்கள் எழுந்துள்ளதாக கூறுகின்றனர். இந்த வகையில் சில துறை மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வும், சில துறை மாணவர்களுக்கு நேரடித் தேர்வும் நடக்கும் என்ற அறிவிப்பு மாணவர்களிடையே அதிக அளவு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாணவர்கள் கல்வி கற்கும் சூழலை மேலும் எளிமையாக்க வேண்டும் என கல்வியாளர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!