LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு – வாட்ஸ்ஆப் மூலம் முன்பதிவு!

0
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு - வாட்ஸ்ஆப் மூலம் முன்பதிவு!
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு - வாட்ஸ்ஆப் மூலம் முன்பதிவு!
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு – வாட்ஸ்ஆப் மூலம் முன்பதிவு!

இந்தியாவில் அனைத்து வீடுகளிலும் தற்போது சமையலுக்கு எரிவாயு சிலிண்டர் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் தற்போது அரசு சார்பாக சமையல் சிலிண்டர் இணைப்பு இலவசமாகவும், அதற்கு மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வாட்ஸ் ஆப் மூலமாக சிலிண்டர் புக்கிங் செய்து வாங்குவது பற்றி விரிவாக பார்ப்போம்.

எரிவாயு சிலிண்டர்

இந்தியாவில் அனைத்து வீடுகளிலும் சமையலுக்கு தேவையான இன்றியமையாத ஒன்று சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகும். மேலும் முன்பெல்லாம் அனைத்து வீடுகளிலும் விறகு அடுப்புகளை பயன்படுத்தி வந்தனர். இதனால் காற்று மாசுபாடு, உடல் நலக்குறைவு ஏற்படுவதுடன் சமையல் செய்வதற்கு அதிக நேரம் தேவைப்படும். இதனை தவிர்க்கும் விதமாக தற்போது அனைத்து வீடுகளிலும் சிலிண்டர் எரிவாயு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக அரசும் இலவச சமையல் சிலிண்டர் இணைப்பும் மானியமும் வழங்கி வருகிறது.

மே 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல் – கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு! கொரோனா பரவல் எதிரொலி!

மேலும் இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் விலை எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா கால கட்டத்தில் சிலிண்டர் எரிவாயு விலை ஒவ்வொரு மாதமும் புதிய உச்சத்தை தொட்டது. அத்துடன் பொதுவாக ஒரு வீட்டிற்கு ஒரு மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ புக்கிங் செய்வார்கள். இதனை SMS, மிஸ்டு கால், ஆன்லைன், மொபைல் ஆப் உள்ளிட்ட வழிமுறைகளில் புக்கிங் செய்யலாம். இதில் வாட்ஸ் ஆப் மூலமாக புக்கிங் செய்வது மிகவும் சுலபமானது.

Exams Daily Mobile App Download

ஒவ்வொரு சிலிண்டர் நிறுவனத்துக்கும் வாட்ஸ் ஆப் நம்பர் மாறுபடும். இதில் HP சிலிண்டர் வாடிக்கையாளர்கள் 9222201122 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலமாக BOOK என்று டைப் செய்து மெசேஜ் செய்ய வேண்டும். இதையடுத்து பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் 1800224344 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு BOOK என்று டைப் செய்து மெசேஜ் அனுப்ப வேண்டும். இதே போல் இண்டேன், பாரத் கேஸ், ஹெச்பி கேஸ் இண்டேன் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் 7588888824 என்ற எண்ணுக்கு REFILL என்று டைப் செய்து அனுப்ப வேண்டும். மேலும் இதற்கு சிலிண்டர் இணைப்புடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து தான் வாட்ஸ்அப் மூலமாக மெசேஜ் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!