கொரோனா தடுப்பூசி செலுத்த WhatsApp இல் முன்பதிவு – பயனர்கள் கவனத்திற்கு!

0
கொரோனா தடுப்பூசி செலுத்த WhatsApp இல் முன்பதிவு - பயனர்கள் கவனத்திற்கு!
கொரோனா தடுப்பூசி செலுத்த WhatsApp இல் முன்பதிவு - பயனர்கள் கவனத்திற்கு!
கொரோனா தடுப்பூசி செலுத்த WhatsApp இல் முன்பதிவு – பயனர்கள் கவனத்திற்கு!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வாட்ஸ் ஆப் மூலம் முன்பதிவு செய்யும் புதிய வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

தடுப்பூசி முன்பதிவு:

இந்தியாவில் கொரோனா 2 வது அலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டதே காரணமாக பார்க்கப்படுகிறது. இத்தகைய தடுப்பூசி பல்வேறு விதமாக அதாவது, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஞாயிறு தோறும் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 36 ஆயிரத்திலிருந்து தற்போது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தற்போது நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 25,467 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 3,24,74,773 ஆக அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் 354 பேர் தொற்றால் பாதித்து இறந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,35,110 ஆக உயர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் 14,373 பேர் தொற்றால் பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

இதனால் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 3,19,551 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை 58.89 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் அதிக அளவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள தூண்டும் விதமாக புதிய முறை மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்ள இதுவரை cowin இணைய தளத்தில் பதிவு செய்தவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. பின்னர் நேரடியாக பதிவு செய்யப்பட்டு தடுப்பூசி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது எந்த தேதியில், எந்த நேரத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று வாட்ஸ் ஆப்-ல் முன்பதிவு செய்துகொள்ளும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா வெளியிட்டுள்ளார். முன்பதிவு செய்யும் முறை பின்வருமாறு: முதலில் 9013151515 என்ற பத்து இலக்க எண்ணை மொபைலில் save செய்ய வேண்டும். பின்னர் அந்த எண்ணுக்கு ‘book slot’ என்ற குறுந்தகவல் அனுப்ப வேண்டும். பின்னர் 6 இலக்க OTP வரும் அதை உள்ளிட்ட பின்னர் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் மற்றும் பெயர் காட்டப்படும். அதில் உங்கள் பெயரை தேர்வு செய்து பின்கோடு உள்ளிட்டு கிடைக்கப்பெறும் இலவச மற்றும் பணம் செலுத்தும் தடுப்பூசி ஸ்லாட்டுகளில் முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும் பூஸ்டர் தடுப்பூசி குறித்து எந்தவித முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்று நிதி அயோக்கின் கொரோனா பணிக்குழு தலைவர் என்.கே அரோரா நேற்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here