பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரி குறைப்பு?- மத்திய நிதி அமைச்சர் விளக்கம்!

0
பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரி குறைப்பு?- மத்திய நிதி அமைச்சர் விளக்கம்!
பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரி குறைப்பு?- மத்திய நிதி அமைச்சர் விளக்கம்!
பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரி குறைப்பு?- மத்திய நிதி அமைச்சர் விளக்கம்!

பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்கள் மீதான சுங்க வரியை குறைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு எந்த எண்ணமும் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

சுங்க வரி குறைப்பு:

நாட்டில் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏறி வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். மத்திய அரசுக்கு இது தொடர்பாக தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. இருப்பினும், எரிபொருட்களின் விலை குறைந்த பாடில்லை. இதனால் சாதாரண நிலையில் உள்ள மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில்,மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் 2021 ன் NTPC Answer Keys – ரயில்வே வாரியம் வெளியீடு!

அதில், எரிபொருட்களின் மீதான கலால் வரியை குறைக்கும் எண்ணம் தற்போது இல்லை. தொடர்ந்து எண்ணெய் பத்திரங்கள் மீதான சுமையின் காரணமாக எரிபொருட்களின் விலையை குறைக்க முடியவில்லை. இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ஒரு தீர்வு காண வேண்டும். ரூ.1.44 லட்சம் கோடிக்கு எண்ணெய் பத்திரங்களை வெளியிட்டு காங்கிரஸ் அரசு எரிபொருள் விலையை குறைத்தது.

TN Job “FB  Group” Join Now

ஆனால் காங்கிரஸ் அரசு வெளியிட்டிருந்த எண்ணெய் பாத்திரங்களை வட்டி செலுத்தும் காரணத்தால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதற்காக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.70,195 கோடிக்கும் மேல் மத்திய அரசு வட்டி செலுத்தியுள்ளது. மேலும், 2026ம் ஆண்டு வரை இன்னும் ரூ.37,000 கோடி அளவுக்கு வட்டி செலுத்த வேண்டும். இந்த வட்டி தொகை முழுவதையும் செலுத்தினாலும், அசல் மட்டும் ரூ.1.30 லட்சம் கோடி பாக்கி இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த அறிவிப்பால் பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பது தெளிவாகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!