மாநில அரசு அலுவலகங்களில் பணிநேரம் குறைப்பு – மின்சார தட்டுப்பாடு எதிரொலி!

0
மாநில அரசு அலுவலகங்களில் பணிநேரம் குறைப்பு - மின்சார தட்டுப்பாடு எதிரொலி!
மாநில அரசு அலுவலகங்களில் பணிநேரம் குறைப்பு - மின்சார தட்டுப்பாடு எதிரொலி!
மாநில அரசு அலுவலகங்களில் பணிநேரம் குறைப்பு – மின்சார தட்டுப்பாடு எதிரொலி!

பஞ்சாப் மாநிலத்தில் மின்சார தட்டுப்பாடு காரணமாக அங்கு அரசு அலுவலகங்களில் பணியாற்றும் நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மின்சாரம் தட்டுப்பாடு இன்றி வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

மின்சார தட்டுப்பாடு:

இந்தியாவின் வட மாநிலங்களில் வெயில் கொளுத்தி வருகின்றது. இதன் காரணமாக பல மாநிலங்கள் பெரும் பாதிப்பினை சந்தித்து வருகின்றது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. வெயிலின் காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படும் என்று அந்த மாநில அரசு உறுதி அளித்துள்ளது.

தமிழகத்தில் ஆகஸ்ட் முதல் வாரம் மீண்டும் பள்ளிகள் திறப்பு? அரசுக்கு பரிந்துரை!

இப்படியான சூழலில், வெறும் 5 அல்லது 6 மணி நேரம் மட்டுமே தங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுவதாக விவசாயிகள் அரசிடம் புகார் அளித்துள்ளனர். இதற்கு மத்தியில் அந்த மாநில மின் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கியுள்ளனர். போராட்டத்தை கைவிடுமாறு முதல்வர் அமரீந்தர் சிங் அனைவரிடமும் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது இந்த மின்சார தடுப்பாடினை சமாளிக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள்
  • அரசு அலுவலகங்கள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.
  • இனி அரசு அலுவலகங்களில் ஏசி பயன்படுத்த கூடாது. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

  • பல்வேறு தனியார் நிறுவனங்களில் 2 நாட்கள் விடுமுறை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • மின்சார விநியோகத்தில் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

இப்படியாக அந்த மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, வடக்கு ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கடுமையான வெயில் இருக்கும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here