பட்ஜெட் விலையில் பல சிறப்பு அம்சங்களுடன் சூப்பர் போன் – இந்தியாவில் Redmi 10 Prime வெளியீடு!

0
பட்ஜெட் விலையில் பல சிறப்பு அம்சங்களுடன் சூப்பர் போன் - இந்தியாவில் Redmi 10 Prime வெளியீடு!
பட்ஜெட் விலையில் பல சிறப்பு அம்சங்களுடன் சூப்பர் போன் - இந்தியாவில் Redmi 10 Prime வெளியீடு!
பட்ஜெட் விலையில் பல சிறப்பு அம்சங்களுடன் சூப்பர் போன் – இந்தியாவில் Redmi 10 Prime வெளியீடு!

ரெட்மி நிறுவனம் கடந்த மாதம் ஒரு புதிய மொபைலை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், தற்போது புதிய மாடல் ஒன்றை இந்தியாவில் வெளியிட்டு உள்ளது.

Redmi 10 Prime:

தற்போதைய சூழ்நிலையில் அனைத்து வயதினருக்கும், எல்லா தரப்பினருக்கும் மொபைல் போனின் தேவை அதிகரித்துள்ளது. கல்வி முதல் வணிகம் வரை அனைத்திலும் ஆன்லைன் வந்து விட்ட பிறகு, சொல்லவே வேண்டாம். மொபைல் இல்லாமல் தினசரி நாளை களிப்பதே சிரமமாகி விட்டது. இதனால் சந்தையில் புதுப்புது மொபைல் போன்கள் விற்பனைக்கு வந்த வண்ணம் உள்ளது. அதிலும், ரெட்மி நிறுவனம் கடந்த மாதம் தான் புதிய மொபைல் மாடல் ஒன்றை அறிமுகம் செய்திருந்த நிலையில், தற்போது இந்தியாவில் இன்று ரெட்மி 10 ப்ரைம் மாடல் மொபைலை அறிமுகம் செய்துள்ளது.

சிறப்பம்சங்கள்:

ரெட்மி 10 ப்ரைம் மாடல் ஹோல்-பஞ்ச் டிஸ்பிளே வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு, அதில் 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் மற்றும் மீடியாடெக் ஹீலியோ G88 SoC போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மாடல் ரூ.12,499 மற்றும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடல் ரூ.14,499 என்ற இரு விதமாக கிடைக்கிறது. மேலும் ஆஸ்ட்ரல் ஒயிட், பிஃப்ரோஸ்ட் ஒயிட் மற்றும் பாண்டம் பிளாக் போன்ற மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இணையதளம் மற்றும் நேரடி விற்பனை நிலையங்களின் மூலம் வரும் செப்டம்பர் 7ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.

IBPS RRB Office Assistant (Clerk) தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு!!

6000mAh பேட்டரி, 10W ஃபாஸ்ட் சார்ஜிங், ஆனால் 22.5W சார்ஜர் உடன் அனுப்பப்படும். 9W வரை ரிவர்ஸ் சார்ஜிங், குவாட் ரியர் கேமரா, அமைப்பு, 50 எம்பி மெயின் கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர், மேலும் Full HD வீடியோ பதிவு போன்ற சிறப்பம்சங்களுடன் வருகிறது. ஆக்ஸிலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட், மேக்னடோமீட்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி போன்ற சென்சார்கள் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் போன்றவை புது அம்சங்களாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!