விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் அமீருக்கு ரெட் கார்டு? ரசிகர்கள் கொந்தளிப்பு!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' வீட்டில் அமீருக்கு ரெட் கார்டு? ரசிகர்கள் கொந்தளிப்பு!
விஜய் டிவி 'பிக் பாஸ்' வீட்டில் அமீருக்கு ரெட் கார்டு? ரசிகர்கள் கொந்தளிப்பு!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் அமீருக்கு ரெட் கார்டு? ரசிகர்கள் கொந்தளிப்பு!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் 10 வாரங்கள் முடிவடைந்த நிலையில் அமீர் பாவ்னிக்கு முத்தம் கொடுக்கும் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனால் அமீருக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

பிக்பாஸ் ரெட் கார்ட்:

பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு மாறுப்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சியாகும். முதல் சீசன் மக்களின் பெரிய எதிர்பார்ப்புடன் தொடங்கி மாபெரும் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து நான்கு சீசன்கள் முடிவடைந்து. இந்த ஆண்டு ஐந்தாவது சீசன் தொடங்கப்பட்டுள்ளது. முதல் சீசனில் ஓவியா ஆரவ் காதல் காட்சிகள் பெரிதும் பேசப்பட்டது. மேலும் ஓவியாவுக்கு ஆரவ் முத்தம் கொடுத்தது, மருத்துவ முத்தம் என கமல்ஹாசனால் விமர்சனம் செய்யப்பட்டது.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டை இணைப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

அந்த சீசனுக்கு நிகராக இதுவரை எந்த சீசனும் வரவில்லை. இந்நிலையில் தற்போது தொடங்கப்பட்டுள்ள ஐந்தாவது சீசனில் எந்த காதல் காட்சிகளும் காட்டப்படவில்லை. பாவ்னி கணவரை இழந்தவர் இழந்தவர் என்பதால் ஆரம்பத்தில் இருந்தே அவர் மீது சக ஆண் போட்டியாளர்களுக்கு கருணை இருக்கிறது. அதை தொடர்ந்து அபிநய் பாவ்னி மீது அக்கறை காட்டியது காதலாக மாறியது. ஒரு கட்டத்தில் மற்ற போட்டியாளர்களிடம் அது முக சுளிப்பை ஏற்படுத்தியது. பாவ்னி பிடித்தும் பிடிக்காதது போல இருக்க, கடந்த வாரம் அது கமல்ஹாசனால் விமர்சனம் செய்யப்பட்டு தீர்த்து வைக்கப்பட்டது.

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – ஜாக்பாட் அறிவிப்பு!

அதன் பின் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலமாக நிகழ்ச்சிக்கு வந்த அமீர் பாவ்னி உடன் நெருக்கமாக பழகுவதும், அவர் மிகவும் அழகாக இருக்கிறார் என அடிக்கடி சொல்வதும், விளையாட்டுக்கு அடித்து கொள்வது என இருந்தது. பின் இரண்டு நாட்களுக்கு முன்பு பிரியங்காவிடம் பாவ்னியை காதலிப்பதாக சொல்லிவிட்டேன் என வெட்கபட்டுக் கொண்டே சொல்லி இருக்கிறார். அதையும் பாவ்னி வெட்கத்துடன் பதில் சொல்ல, தற்போது பாவ்னி காதில் அமீர் எதோ சொல்ல வருகிறார். அப்போது அவருக்கு முத்தம் கொடுப்பது போல காட்சிகள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதனால் அமீருக்கு உடனே ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!