மீண்டும் ரெட் அலர்ட் & முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? தீவிரமடையும் கொரோனா பரவல்!

0
மீண்டும் ரெட் அலர்ட் & முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? தீவிரமடையும் கொரோனா பரவல்!
மீண்டும் ரெட் அலர்ட் & முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? தீவிரமடையும் கொரோனா பரவல்!
மீண்டும் ரெட் அலர்ட் & முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? தீவிரமடையும் கொரோனா பரவல்!

தேசிய தலைநகர் டெல்லியின் கொரோனா நேர்மறை விகிதம் இப்போது 7.64 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில் ரெட் அலர்ட் விதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனுடன் முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் வேகமெடுத்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தேசிய தலைநகர் டெல்லியில் கொரோனா நேர்மறை விகிதம் 7.64 சதவீதமாக உயர்ந்துள்ளது, மீண்டும் முழு ஊரடங்கு குறித்த அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது GRAP விதிகள் பரிந்துரைப்பதன் படி, கொரோனா பாசிட்டிவிட்டி விகிதம் 5% ஐ தாண்டினால் கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்சன் பிளான் (GRAP) கீழ் சிவப்பு எச்சரிக்கை விதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மேரா ரேஷன் செயலியின் முக்கிய அம்சங்கள்!

இந்த சிவப்பு எச்சரிக்கை நடைமுறைக்கு வந்தால், டெல்லியில் முழு ஊரடங்கு விதிக்கப்படும் என்றும் கொரோனா பரவுவதைத் தடுக்க பல பொருளாதார நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மேலும் இரவு அல்லது வார இறுதியில் ஊரடங்கு உத்தரவு, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடல் ஆகியவை டெல்லியில் அமல்படுத்தப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த GRAP திட்டம் கொரோனா மூன்றாவது அலையின் போது டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் கடந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது.

இது கொரோனா சூழ்நிலையைப் பொறுத்து கட்டுப்பாடுகளை விதிப்பது மற்றும் நீக்குவது பற்றிய தெளிவான விவரங்களை தருகிறது. அந்த வகையில் இந்த நான்கு-நிலை கிரேடட் ரெஸ்பான்ஸ் செயல்திட்டம் (GRAP), தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நேர்மறை விகிதம் 5% ஐ தாண்டினால் ‘சிவப்பு’ எச்சரிக்கையை அறிவிக்கும் என்று அறிவுறுத்துகிறது. இது பல கட்டுப்பாடுகளுக்கு வழிவகுக்கும். இப்போது டெல்லியில் கொரோனா நேர்மறை விகிதம் 5% ஐ தாண்டி இருக்கும் பட்சத்தில் GRAP விதிக்கப்பட்டால் என்னென்ன கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்பதை குறித்து விரிவாக பார்க்கலாம்.

  • தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நேர்மறை விகிதம் ஐந்து சதவீதத்திற்கு மேல் இருந்தால், அது டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட GRAPன் கீழ் ‘ரெட் அலர்ட்’ அமல்படுத்தப்படும்.
  • இதன் மூலம் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டு பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் நிறுத்தப்படும்.
  • இது இரவு மற்றும் வார இறுதி நாட்களில் மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகளை அனுமதிக்கும்.
  • அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் சேவைகளை கையாளும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும்.
  • வணிக வளாகங்கள் மற்றும் வாரச்சந்தைகள் மூடப்பட்டிருக்கும்.
Exams Daily Mobile App Download
  • உணவகங்கள் மற்றும் பார்கள் மூடப்படும். மேலும் அத்தியாவசிய பொருட்களை மட்டுமே விநியோகிக்க கடைகள் அனுமதிக்கப்படும்.
  • ஹோட்டல்கள் மற்றும் லாட்ஜ்கள் திறந்த நிலையில் இருக்க அனுமதிக்கப்படும்.
  • ஆனால் விருந்துகள்/மாநாடுகள் எதுவும் ஏற்பாடு செய்யப்படாது.
  • திரையரங்குகள், விருந்துகள், ஸ்பாக்கள், யோகா நிறுவனங்கள் மற்றும் அழகு நிலையங்கள் ஆகியவை மூடப்படும்.
  • அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகளை தவிர மற்ற அரசாங்க அலுவலகங்களும் மூடப்படும்.
  • தனியார் அலுவலகங்களுக்கும் இது பொருந்தும்.
  • திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்கு கூட்டங்களுக்கான வரம்பும் குறைக்கப்படும்.
  • GRAP நடைமுறையில் இருக்கும் போது டெல்லிக்கு வருபவர்கள் முழுமையான தடுப்பூசி சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்கு மிகாமல் ஒரு எதிர்மறை RT-PCR அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
  • அவ்வாறு செய்யத் தவறியவர்கள் 14 நாள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.

இதற்கிடையில் டெல்லியில் கொரோனா வழக்குகள் அதிகரித்து வந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இன்னும் குறைவாகவே உள்ளது என்றும், தற்போது நகரத்தில் கொரோனா நிலைமை அவ்வளவு தீவிரமாக இல்லை என்றும் டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறியுள்ளார். மேலும் வழக்குகளின் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் நிலைமையை கவனித்துக் கொண்டிருக்கும் வேளையில் தற்போதைய சூழ்நிலையில் பெரிய கட்டுப்பாடுகள் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,354 கொரோனா பாதிப்புகள் மற்றும் ஒரு இறப்பும் பதிவாகியுள்ளன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!