தமிழகத்தில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை – உஷார் மக்களே!

0
தமிழகத்தில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை – உஷார் மக்களே!

வங்க கடலில் தற்போது நிலை கொண்டுள்ள மிக் ஜாம் புயல் காரணமாக தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை இரண்டு நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை:

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவடைந்து மிக் ஜாம் புயலாக பெயரிடப்பட்டுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 310 கிலோமீட்டர் தொலைவில் இந்த புயல் தற்போது நிலை கொண்டுள்ளது. மேலும் வட மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக கடலோர பகுதிகளில் டிசம்பர் 4ஆம் தேதி சென்றடையும். மேலும் டிசம்பர் 5ஆம் தேதி ஆந்திர பிரதேசம் கடற்கரையில் 100 கிலோ மீட்டர் காற்றுடன் புயலாக கரையை கடக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக (TNAU) வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.31,000/- || நேர்காணல் மட்டுமே…!

இதன் காரணமாக டிசம்பர் 3ஆம் தேதியான இன்று தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும், டிசம்பர் 4ம் தேதியான நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் அனைவரும் தகுந்த முன்னேற்பாடுகளுடன் கவனமாக இருக்குமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் அரசு தரப்பில் இருந்து புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!