பருவமழை காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்!

0
பருவமழை காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்!
பருவமழை காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்!
பருவமழை காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்!

இந்தியாவில் தற்போது மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய நகரங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

ரெட் அலர்ட்:

இந்தியாவில் தற்போது வட மற்றும் தென் மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுவையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அதே போல கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. எப்போதும் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு மே இறுதியிலேயே தொடங்கி விட்டது. இதனால் தொடர்ந்து பெய்த கனமழையால், இடுக்கி, ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இரவு பகலாக பெய்து வரும் மழையால் கேரளாவில் அதிரப்பள்ளி அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தமிழகத்தில் பேருந்துகளில் ‘இது’ கட்டாயம் – மாநகராட்சி முக்கிய அறிவிப்பு!

இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து அம்மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கேரளாவை தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பெய்து வரும் கனமழையால் நகரின் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் சயான், பாந்த்ரா, கிங்சர்க்கிள், மாட்டுங்கா, குர்லா போன்ற பகுதியில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஓடுகிறது. இத்தகைய சூழலில் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதுவரை மும்பை சான்டா குரூஸ் பகுதியில் 193.6 மிமீ மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து கோவாவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மும்பையில் நேற்று இரவு பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் அத்துடன் குடியிருப்புகள், முக்கிய சாலைகள், ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் இந்திய வானிலை மையம் மும்பை, கோவாவுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இடி, மின்னலுடன் மிக கனமழை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here