கூடுதல் வெப்பத்தால் ரெட் அலர்ட் எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

0
கூடுதல் வெப்பத்தால் ரெட் அலர்ட் எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
கூடுதல் வெப்பத்தால் ரெட் அலர்ட் எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
கூடுதல் வெப்பத்தால் ரெட் அலர்ட் எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

சீனாவில் கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் அளவு அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில், சீனா மாகாணத்தின் சில பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரெட் அலார்ட்:

சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் அளவு அதிகமாக இருந்து வருகிறது. அதாவது கடந்த ஜூலை 5 ஆம் தேதியில் இருந்தே சீனாவில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் சீனா மாகாணத்தின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஷாங்காய் நகரில் வசித்து வரும் பொது மக்களுக்கு ஷாங்காய் வானிலை ஆய்வு மையம் கடுமையான வெப்பத்தை சமாளிப்பது தொடர்பாக சில வழிகாட்டுதல்களை ஷாங்காய் வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு வழங்கி வருகிறது.

Exams Daily Mobile App Download

அதாவது, கடுமையான வெப்பத்தை சமாளிக்க மற்றும் வெப்ப தாக்குதலில் இருந்து பாதுகாக்க நண்பகலில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பகல் நேரங்களில் வேலைக்கு செல்வதை ஊழியர்கள் தவிர்க்கும்படியும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், பொதுவெளிகளில் வேலை பார்க்கும் பொதுமக்களாக இருந்தால் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிப்போருக்கு புதிய அம்சம் – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

மேலும், கடந்த வாரம் சீனாவில் அதிகமான வெப்பநிலை மற்றும் கூடுதல் வெப்ப கதிர்வீச்சின் காரணமாக சீனாவில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த வாரம் அதை விட கூடுதலாக வெப்பம் நிலவும் என்பதால் மாகாணத்தின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, சீனா நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை 39 அல்லது 40 டிகிரி செல்சியஸுக்கும் மேல் இருக்கும் என ஷாங்காய் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!