ரயில்வே கேட்களில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் – தெற்கு ரயில்வே ஊழியர் சங்கம் எதிர்ப்பு!

0
ரயில்வே கேட்களில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் - தெற்கு ரயில்வே ஊழியர் சங்கம் எதிர்ப்பு!
ரயில்வே கேட்களில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் - தெற்கு ரயில்வே ஊழியர் சங்கம் எதிர்ப்பு!
ரயில்வே கேட்களில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் – தெற்கு ரயில்வே ஊழியர் சங்கம் எதிர்ப்பு!

தமிழகத்தில் தெற்கு ரயில்வே சார்பில் ரயில்வே கேட்களில் ஒப்பந்த அடிப்படையில் முன்னாள் படை வீரர்களை கேட்கீப்பர்களாக நியமிக்க திட்டம் வெளியாகி இருக்கும் நிலையில் அதற்கு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தெற்கு ரயில்வே

தெற்கு ரயில்வேயில் கடந்த 2019 ஆம் ஆண்டு ரயில்வே தேர்வு வாரியம் சார்பில் காலி பணியிடங்களை நிரப்ப இறுதி கட்ட பணிகள் நடைபெற்றது. அப்போது முன்னாள் படைவீரர்களை நேரடியாக கேட் கீப்பராக பணி அமர்த்தலாம் என உத்தரவிடப்பட்டது. அதனால் பணி வாய்ப்பிற்கு காத்து கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நடவடிக்கை அனைத்து கேட்களையும் ஒப்பந்த பணியாளர்களை கொண்டு நிரப்பும் நடவடிக்கையாக அமையும் என ஊழியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்

தமிழகத்தில் தென் மண்டல மாநிலங்கள் அளவிலான ஹாக்கி விளையாட்டு போட்டி – இன்று (மார்ச் 19) முதல் தொடக்கம்!

இது குறித்து தெற்கு ரயில்வே ஊழியர் சங்கம் நிர்வாகி கூறுகையில், ரயில்வே கோட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட்டால் அதன் மூலம் ஏற்கனவே பதவி உயர்வு குறைவாக உள்ள பொறியியல் பிரிவில் மீண்டும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் இல்லாமல் போகும். மேலும் ரயில்வே பணி வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருக்கும், இளைஞர்களுக்கு இழைக்கப்படும் பெரிய அநீதி ஆகும். அதனால் இந்த ஒப்பந்த நியமனத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!