அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவ வீரர்களுக்கான ஆட்சேர்ப்பு – விண்ணப்ப பதிவு ஆரம்பம்!

0
அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவ வீரர்களுக்கான ஆட்சேர்ப்பு - விண்ணப்ப பதிவு ஆரம்பம்!
அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவ வீரர்களுக்கான ஆட்சேர்ப்பு - விண்ணப்ப பதிவு ஆரம்பம்!
அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவ வீரர்களுக்கான ஆட்சேர்ப்பு – விண்ணப்ப பதிவு ஆரம்பம்!

நாடு முழுவதும் பேரதிர்வை உருவாக்கி கொண்டிருக்கும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு மத்தியில், இந்த திட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் மற்றும் நன்மைகள் குறித்து மத்திய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

அக்னிபாத் திட்டம்

புதிதாக தொடங்கப்பட்ட அக்னிபாத் திட்டத்தின் மீதான தொடர்ச்சியான போராட்டங்களுக்கு மத்தியில், மூன்று இராணுவ சேவைகளும் புதிய வீரர்களை சேர்ப்பதற்கான முறையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி, அக்னிபாத் திட்டம் ஆயுதப்படைகளின் சரியான அளவிற்கு கொண்டு வரப்படவில்லை என்றும் மாறாக அவர்களின் வயதைக் குறைக்கவும் அவர்களின் ஒட்டுமொத்த திறனை மேம்படுத்தவும் கொண்டுவரப்பட்டது என்று வலியுறுத்தினார்.

Exams Daily Mobile App Download

அதாவது, 17 மற்றும் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களை நான்கு ஆண்டுகளுக்கு மட்டும் பணியில் அமர்த்தும் புதிய ராணுவ சேர்க்கைக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் வன்முறை எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து இது குறித்து எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த விவரம் குறித்து அவர் கூறுகையில், ‘இந்திய ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு செயல்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது போலவே இப்போதும் இந்த நடவடிக்கை தொடரும். ஆயுதப் படைகளில் சிறந்த திறமைசாலிகளை ஈர்க்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மேலும், அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டவர்களுக்கான IAFன் இண்டக்ஷன், நுழைவு நிலை தகுதி, தேர்வு பாடத்திட்டம் மற்றும் மருத்துவத் தரநிலைகள் ஆகியவற்றில் எந்தவொரு மாற்றமும் இல்லை. தற்போது இந்தியாவில் உள்ள மக்கள்தொகை சார்ந்த ஈவுத்தொகை உலகளவில் வேறு எந்த நாட்டிலும் இல்லை. நம் நாட்டில் உள்ள இளைஞர்களில் ஐம்பது சதவீதம் பேர் 25 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர். அதை நாம் அதிகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு அட்டவணையை வெளியிட்ட லெப்டினன்ட் ஜெனரல் பொன்னப்பா, ஆன்லைன் பதிவு மற்றும் ஆட்சேர்ப்பு அட்டவணை தொடர்பான அறிவிப்பு ஜூலை 1ல் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மாணவர்களுக்கான கல்வி திட்டம் – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

அந்த வகையில் ஆட்சேர்ப்பு செயல்முறைகள் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் இருந்து தொடங்கும் என்றும், அக்னிவீரர்களின் முதல் தொகுதிக்கான ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு அக்டோபர் 16 மற்றும் நவம்பர் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து டிசம்பர் 22 ஆம் தேதி பயிற்சி மையங்களில் முதற்கட்ட பயிற்சி துவங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அக்னிபாத் திட்டத்தின் கீழ் இரண்டாவது தொகுதிக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு ஜனவரி 23ம் தேதி நடைபெறும் என்றும், ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் பிப்ரவரி 23ம் தேதி முதல் பயிற்சி மையங்களுக்கு செல்வார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்திய விமானப்படை, அக்னிபாத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் பணியை ஜூன் 24 முதல் தொடங்குகிறது. இது தொடர்பான ஆட்சேர்ப்பு அட்டவணையின் விவரங்களைப் பகிர்ந்து கொண்ட ஏர் மார்ஷல் ஜா, ஜூன் 24 முதல் ஜூலை 5 வரை விண்ணப்ப பதிவு செயல்முறைகள் மேற்கொள்ளப்படும் என்றும் STAR தேர்வுக்கான ஆன்லைன் பதிவு ஜூலை 24 முதல் 31 வரை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் IAF அழைப்பு கடிதங்களை வழங்கும் என்றும் அவர்களின் மருத்துவ பரிசோதனைகள் ஆகஸ்ட் 29 முதல் நவம்பர் 8 வரை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையின் ஆட்சேர்ப்பு அட்டவணை குறித்து தகவல் அளித்த துணை அட்மிரல் பணியாளர் தினேஷ் திரிபாதி, அனைத்து ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 1ம் தேதி தொடங்கும் என்றும், ஆட்சேர்ப்புக்கான விரிவான அறிவிப்பு ஜூலை மாதம் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் ஜூலை 15 முதல் 30 வரை விண்ணப்ப சாளரம் திறந்திருக்கும் என்றும், அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் தேர்வு மற்றும் உடல் தகுதித் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், ராணுவ வீரர்களுக்கான பயிற்சி செயல்முறை நவம்பர் 21 ஆம் தேதி தொடங்கும் என்றும் துணை அட்மிரல் திரிபாதி கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here