மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு ஆட்சேர்ப்பு – ஜூலை முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு ஆட்சேர்ப்பு - ஜூலை முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு ஆட்சேர்ப்பு - ஜூலை முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு ஆட்சேர்ப்பு – ஜூலை முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியா முழுவதும் வெடித்து வரும் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் ‘அக்னிபாத்’ திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 24 முதல் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்னிபாத் திட்டம்

மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் தொடரும் நிலையில், இந்திய ராணுவம் அக்னிவீரர் ஆட்சேர்ப்பு பேரணி தொடர்பான புதிய அறிவிப்பை இன்று (ஜூன் 20) வெளியிட்டுள்ளது. அதாவது, இந்திய ராணுவத்தில் ஆயுதப்படைகளின் மூன்று சேவைகளில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் தரத்திற்கு குறைவான வீரர்களை நியமிக்கும் முயற்சியில் மத்திய அரசு அக்னிபாத் என்ற திட்டத்தை ஜூன் 14 அன்று அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்படும் வீரர்கள் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுவார்கள்.

தமிழக மாற்று திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

அவர்கள் ஆறு மாதங்கள் பயிற்சி மற்றும் 3.5 ஆண்டுகள் பணியமர்த்தல் உட்பட 4 ஆண்டுகள் ராணுவப் படைகளில் பணியாற்றுவார்கள். இந்த பதவிக்காலத்தில், இந்திய இராணுவத்திற்கான விஷயத்தை நிர்வகிக்கும் தற்போதைய வழிகாட்டுதல்களின்படி அவர்கள் கௌரவங்கள் மற்றும் விருதுகளுக்கு தகுதியுடையவர்கள் ஆவர். இந்த 4 ஆண்டுகால பணியின் ஓய்வுக்குப் பிறகு, அவர்கள் ராணுவத்தில் தொடர விண்ணப்பிக்கலாம். இருப்பினும் அவர்களில் 25% அக்னிவீரர்கள் மட்டுமே நிரந்தரப் பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்த திட்டம் ஆரம்பத்தில், 17 வயது முதல் 21 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்களுக்கானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பெரும் போராட்டங்களைத் தொடர்ந்து அக்னிபாத் திட்டத்தின் ஆட்சேர்ப்பு செயல்முறைக்கான அதிகபட்ச வயது வரம்பு 23 ஆண்டுகளாக அதிகரிக்கப்படுகிறது என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. இதற்கிடையில் அக்னிபாத் திட்டம் தொடர்பான புதிய விவரங்களை வெளியிட்டுள்ள மத்திய அரசாங்கம், அதற்கான விண்ணப்ப பதிவுகள் ஜூலை முதல் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பில், அக்னிவீரர்களுக்காக ஆயுதப் படைகளில் ஒரு தனித்தனி பதவியை அரசு உருவாக்கும் என்றும், அது தற்போதுள்ள அணிகளில் இருந்து மிகவும் வித்தியாசமானதாக இருக்கும் என்றும் மத்திய அமைச்சகம் கூறியுள்ளது. இதன் மூலம் அக்னிவீரர்கள் எந்த படைப்பிரிவுக்கும் அனுப்பப்படலாம். தொடர்ந்து ஜூலை 1 முதல் அக்னிபாத் திட்டம் தொடர்பான அறிவிப்புகள் பல்வேறு ஆட்சேர்ப்பு பிரிவுகளால் வெளியிடப்படும் என்றும் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும் என்றும் இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.

குறிப்பாக, இத்திட்டத்தில் விண்ணப்பிப்பவர்கள் டிசம்பர் மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் 25,000 பேர் கொண்ட முதல் குழு பயிற்சியில் சேருவார்கள் என்றும் இரண்டாவதாக பணியமர்த்தப்பட்டவர்கள் பிப்ரவரியில் சேருவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்திய கடற்படை தலைமையகம், வரும் ஜூன் 25ம் தேதிக்குள் ஆட்சேர்ப்புக்கான விரிவான வழிகாட்டுதலை வெளியிடும் என்றும் இந்திய விமானப்படை அக்னிபாத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் செயல்முறையை ஜூன் 24 அன்று தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!