தொழிலாளர் வைப்பு நிதியை செலுத்தாத நிறுவனங்களுக்கு மீட்பு இயக்கம் – வெளியான அறிவிப்பு!
இந்தியாவில் நிறுவனங்கள் பாக்கி வைத்துள்ள தொழிலாளர் வைப்பு நிதியை செலுத்தும் வகையில் புதிய நடவடிக்கை எடுக்க இருப்பதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அறிவித்துள்ளது.
நிறுவனம் அறிவிப்பு
மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின் படி நிறுவனங்கள் பாக்கி வைத்துள்ள தொழிலாளர் வைப்பு நிதியை செலுத்தும் வகையில் டிசம்பர் முதல் 3 மாத கால சிறப்பு மீட்பு இயக்கத்தை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில் வைப்பு நிதியை செலுத்தாத நிறுவனங்களிடம் இருந்து நிலுவைத் தொகையை வசூலிக்க சிறப்பு மீட்பு இயக்கம் நடைபெற இருக்கிறது.
TNPSC தேர்வுக்கு தயாராகுகிறீர்களா?- இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!
இந்த இயக்கம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சார்பில் வரும் டிசம்பர் முதல் 2024 பிப்ரவரி வரை மூன்று மாதங்களுக்கு நடைபெற உள்ளது. எனவே பாக்கிகளை செலுத்தாத நிறுவனங்கள் நிலுவையில் உள்ள அனைத்து தொகையையும் இந்த காலகட்டத்துக்குள் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.