‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தனத்திற்கு கிடைத்த அங்கீகாரம் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!

0

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தனத்திற்கு கிடைத்த அங்கீகாரம் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணி புகழ் சுஜிதா, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கையால் விருது பெற்றுள்ளார். இவர் விருது வாங்கிய வீடியோவை சுஜிதா மிகுந்த சந்தோஷம் மற்றும் உற்சாகத்துடன் தன் YOUTUBE சேனலில் பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

உழைப்புக்கு கிடைத்த விருது:

தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இதில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு தனிப்பட்ட முறையில் ஏகப்பட்ட ஃபேன்ஸ் கூட்டமே இருக்கிறது. இந்த சீரியலில் மூத்த அண்ணியாக தனம் என்ற ரோலில் நடித்து வருகிறார் சுஜிதா தனுஷ். இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சுஜிதா,1980 களில் குழந்தை நட்சத்திரமாகக் கலக்கியவர். சுஜிதா கே ஆர் விஜயாவின் பேத்தியாக சினிமாவில் நடிக்க தொடங்கினார். பிறகு பாக்கியராஜ் மற்றும் ஊர்வசி நடித்த முந்தாணை முடிச்சு படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

வங்கக்கடலில் வலுப்பெறும் ‘அசானி’ புயல் – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

தமிழை தவிர சுஜிதா, குழந்தை நட்சத்திரமாக சில தெலுங்கு ,மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர். ரஜினி, கமல், சத்யராஜ், கார்த்திக், சிரஞ்சீவி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய பங்களிப்பை திரைத்துறையில் தந்து வருகிறார்.இந்நிலையில் நடிப்பு மட்டுமல்லாமல் தற்போது இயக்குநராகவும் அவதாரம் எடுத்து தனது முழுத்திறமையை வெளிக்காட்டி வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை, ஏராளமான ரசிகர்கள் தனம் சுஜிதா வுக்காக பார்க்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் தெலுங்கு வெர்ஷினிலும் இவர் அண்ணியாக நடித்துள்ளார். இந்நிலையில் சுஜிதா தற்போது, தெலுங்கானா மாநிலத்தின் கவர்னர் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநரான தமிழிசை சவுந்தராஜன் அவர்களிடமிருந்து விருதினை பெற்றுள்ளார். “மாண்புமிகு மகளிருக்காக” என்ற விருது நிகழ்ச்சியில் சிறந்த ரோல் மாடல் நடிகை என்ற பிரிவில் சுஜிதாவுக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இந்நிலையில் ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் அவர்களிடம் இருந்து தான் விருதை பெற்றதை குறித்து, சுஜிதா தன் YOUTUBE சேனலில்( கதைகேளு கதைகேளு) பதிவிட்டுள்ளார். இதையடுத்து விருதினை பெற்ற சுஜிதாவுக்கு, அவருடைய ரசிகர்கள் “இது உங்கள் உழைப்புக்கு கிடைத்த விருது” என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!