
Airtel vs VI vs Jio ரூ.500க்குள் கிடைக்கும் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா உள்ளிட்ட நாட்டின் அனைத்து முக்கிய தொலைத் தொடர்பு ஆப்ரேட்டர்களும் பல வகையான அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் நன்மைகளை கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன. இதனால் அவற்றில் எது சிறந்தது என்று கண்டுபிடித்து அதை தேர்ந்தெடுப்பது என்பது சற்றே கடினமான ஒரு வேலையாகும். இந்நிலையில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனத்தின் டிஸ்னி ஹாட்ஸ்டார் பலன் அடங்கிய டாப் ரீசார்ஜ் திட்டங்களை இந்த தொகுப்பில் காணலாம்.
பெஸ்ட் ரீசார்ஜ் திட்டங்கள்:
ரிலையன்ஸ் ஜியோ: ரிலையன்ஸ் ஜியோ ரூ500க்குள் டிஸ்னி ஹாட்ஸ்டார் பலன் அடங்கிய 3 திட்டங்களை கொண்டுள்ளது. அதில், ரூ151 ஆட் ஆன் பேக் பயனர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஏனெனில், மூன்று மாத டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் வசதியும், 8 GB டேட்டா வசதியும் கிடைக்கிறது. இந்த டேட்டாவை, வாடிக்கையாளர் ஏற்கனவே ரீசார்ஜ் செய்த பிளானின் வேலிடிட்டி காலம் வரை உபயோகிக்கலாம்.
அடுத்ததாக, ரூ333 திட்டத்தில் 28 நாட்களுக்கு தினமும் 1.5 GB டேட்டா கிடைக்கிறது. மேலும் 3 மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வசதி கிடைக்கின்றன. மேலும், வரம்பற்ற குரல் அழைப்புகளும், தினமும் 100 SMS வசதியும் கிடைக்கின்றன.
தொடர்ந்து ரூ499 திட்டம் 28 நாள்கள் வேலிடிட்டி கொண்டது. இதில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வசதி ஓராண்டுக்கு கிடைக்கிறது. கூடுதலாக, தினமும் 2GB டேட்டாவும், வரம்பற்ற குரல் அழைப்பும், டெய்லி 100 SMSம் கிடைக்கின்றன.
ஏர்டெல்: ஏர்டெல், ரூ500க்குள் டிஸ்னி ஹாட்ஸ்டார் பலன் அடங்கிய 2 திட்டங்களை கொண்டுள்ளது. முதல் திட்டமான ரூ399 பிளான் 28 நாள்கள் வேலிடிட்டி கொண்டது. இதில், தினமும் டேட்டா 2.5 GB கிடைக்கிறது. இதில், மூன்று மாத டிஸ்னி ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா கிடைக்கிறது. மேலும் வரம்பற்ற அழைப்பும், டெய்லி 100 SMS வசதியும் கிடைக்கிறது.
அடுத்த, ரூ499 திட்டமும் 28 நாள்கள் வேலிடிட்டி கொண்டது ஆகும். ஆனால், முந்தைய திட்ட பலன்களுடன் ஒப்பிட்டால், இதில் ஓராண்டிற்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வசதி கிடைக்கிறது.
Exams Daily Mobile App Download
வோடபோன் ஐடியா: வோடபோன் ஐடியாவில் ரூ500க்குள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வசதியுடன் ஒரு திட்டம் மட்டுமே உள்ளது. ரூ499 திட்டம், 28 நாள்கள் வேலிடிட்டி கொண்டது. இதில், தினமும் 2GB டேட்டாவும், வரம்பற்ற குரல் அழைப்பும், 100 SMSம் கிடைக்கின்றன. கூடுதலாக இத்திட்டத்தில் ஓராண்டிற்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வசதி கிடைக்கின்றன.