Jio பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – பணம் செலுத்தாமல் ரீசார்ஜ் செய்யலாம்!

0
Jio பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - பணம் செலுத்தாமல் ரீசார்ஜ் செய்யலாம்!
Jio பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - பணம் செலுத்தாமல் ரீசார்ஜ் செய்யலாம்!
Jio பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – பணம் செலுத்தாமல் ரீசார்ஜ் செய்யலாம்!

சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மலிவு விலையிலான ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்திய கையோடு, புதிய ப்ரீபெய்டு திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டமானது பயனர்கள் ரீசார்ஜ் செய்த பின்னர் பணம் செலுத்தும் முறையை வழங்குகிறது.

ரீசார்ஜ் திட்டம்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உலக மார்க்கெட்டுகளில் இல்லாத அளவுக்கு மலிவு விலையிலான ஸ்மார்ட் போனை தயாரித்துள்ளதாகவும், அவை கூடிய விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது. இதனிடையே ஜியோ வாடிக்கையளர்களுக்கென ஒரு பிரத்யேக ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டமானது, அதிகளவிலான டேட்டாக்களை வழங்குவதோடு அல்லாமல் சிறந்த வேலிடிட்டியையும் அளிக்கிறது.

தமிழக தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

ஜியோ நெட்வொர்க்கின் இந்த திட்டம் ரூ.3,499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஜியோவின் அதிகபட்ச விலையுடைய திட்டமாகும். இதன் கீழ் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 3 ஜிபி டேட்டா கிடைக்கும். அந்த வகையில் மொத்தம் 1095 ஜிபி டேட்டா பேக் கொடுக்கப்படுகிறது. இவை 365 நாட்கள் வேலிடிட்டி உடையது. மேலும் கொடுக்கப்பட்ட இந்த டேட்டா முடிந்த பிறகு, இணையவேகம் 64Kbps ஆக இருக்கும். இந்த திட்டத்தில் ன்லிமிட்டட் கால், தினசரி 100 SMS சேவைகள் கிடைக்கும். மேலும் JioTV, JioCinema, JioSecurity, JioCloud மற்றும் JioNews உள்ளிட்ட கூடுதல் சேவைகளும் இதில் வழங்கப்படுகிறது.

இதற்கிடையில் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் Jio வின் ரீசார்ஜ் திட்டத்தில் டேட்டா முடிந்துவிட்டால், ஜியோ நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்றுக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளும் Recharge Now and Pay Later வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் உங்களிடம் பணம் இருக்கும் போது ரீசார்ஜ் செய்ததற்கான தொகையை திரும்ப செலுத்தலாம். வாடிக்கையாளர்கள் வழக்கமாக பயன்படுத்தும் டேட்டா பேக் முடிந்து விட்டால், அவர்களுக்கு ஏற்படும் சிக்கலை சரி செய்ய அவசர டேட்டா கடன் வசதியை ஜியோ வழங்குகிறது.

TN Job “FB  Group” Join Now

இதன் கீழ், ரூ.11 செலுத்தி டேட்டா திட்டத்தை செலுத்தாமல் நீங்கள் ரீசார்ஜ் செய்யலாம். இருப்பினும் இந்த பணத்தை நீங்கள் பின்னர் செலுத்த வேண்டியிருக்கும். இந்த அவசர டேட்டா லோனின் கீழ், நீங்கள் அதிகபட்சமாக ரூ.11 க்கு சுமார் 5 முறை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். அதாவது மொத்தம் 5 ஜிபி டேட்டா இதில் கூடுதலாக கிடைக்கும். ஜியோவின் ரூ.11 டேட்டா பேக்கில் 1 ஜிபி டேட்டா பெற்று கொள்ளலாம். இந்த டேட்டா பிளானை பெறுவதற்கு,

  • உங்கள் மொபைலில் MyJio ஆப்பை டவுன்லோட் செய்யவும்.
  • இடதுபுறத்தில் Menu பட்டன் கொடுக்கப்பட்டிருக்கும்.
  • அதில் Emergency Data Loan என்ற ஆப்சனில் Proceed என்பதை தேர்வு செய்யவும்.
  • தொடர்ந்து Get emergency data என்பதை கிளிக் செய்யவும்.
  • பிறகு Activate now என்பதை தேர்வு செய்யவும்.
  • இப்போது உங்கள் எண்ணிற்கு ரூ.11 செலவில் 1 ஜிபி டேட்டா பேக் செயல்படுத்தப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!