‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலை விட்டு லட்சுமி அம்மா விலகியதற்கு காரணம்? நடிகை ஷீலா பேட்டி!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலை விட்டு லட்சுமி அம்மா விலகியதற்கு காரணம்? நடிகை ஷீலா பேட்டி!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலை விட்டு லட்சுமி அம்மா விலகியதற்கு காரணம்? நடிகை ஷீலா பேட்டி!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலை விட்டு லட்சுமி அம்மா விலகியதற்கு காரணம்? நடிகை ஷீலா பேட்டி!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து நடிகை ஷீலா விலக்கியதற்கு அவரது மகன் விக்ராந்த் தான் காரணம் என்ற செய்திகள் பரவி வருகிறது. இதற்கு நடிகை ஷீலா விளக்கம் அளித்துள்ளார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்

விஜய் டிவியில் தற்போது பல கவலையான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல். இந்த சீரியலில் தற்போது லட்சுமி அம்மா மறைந்து விட்டது போல காட்டப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 3 வருடங்களாக இந்த சீரியலில் லட்சுமி அம்மா கதாபாத்திரத்தில் நடித்து விட்டு திடீரென்று நீக்கப்பட்டுள்ளார். கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரது திருமணம் பற்றி காட்டி கொண்டு இருக்கும் போது, திடீரென்று நடிகை ஷீலா நீக்கப்பட்டது ரசிகர்களை வெகுவாக பாதித்தது. ஆனால், இது குறித்து சீரியல் குழுவினர் பல காரணங்களை கூறினர்.

விஜய் டிவியில் அக்.4 முதல் பிரபல சீரியல்களின் நேரம் மாற்றம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ஒளிபரப்பாகும் அதே நேரத்தில் தான் சன் தொலைக்காட்சியில் ‘பூவே உனக்காக’ சீரியலும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. அந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்ததால் தான் இந்த அதிரடி திருப்பம் என்று கூறப்பட்டது. இது குறித்து நடிகை ஷீலா ஒரு பேட்டியில் அதுவே உண்மை என்பது போன்றும் கூறி இருந்தார். பாடத்தில் அவரை ஏற்றி செல்லும் காட்சிகளுக்காக சீரியல் குழுவினர் அவரை போலவே டூப் செய்து காட்சியாக்கினர் என்றும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.

கண்ணன், ஐஸ்வர்யாவை ஏற்றுக் கொண்ட மூர்த்தி, மகிழ்ச்சியில் தனம் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ!

இப்படியான நிலையில், ஒரு சிலர் நடிகை ஷீலா தனது மகன் விக்ராந்த் கூறியதற்காக தான் சீரியலில் இருந் விலகி உள்ளார் என்று தெரிவித்து வந்தனர். இதற்கு தற்போது நடிகை ஷீலா பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, ‘எனது மகன் கூறியதற்காக நான் சீரியலை விட்டு விலகவில்லை. எனது மகன் தான் இதற்கு காரணம் என்று கூறுவது வெறும் வதந்தியே. நான் மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியல் ஒன்றில் ஹீரோயின் அம்மாவாக நடிக்க இருக்கிறேன். எனது மகன் கூறி நான் விலகி இருந்தால், எதற்காக நான் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலை விட்டு விலக வேண்டும்’ என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!