பாரதி கண்ணம்மாவில் இருந்து ரோஷினி விலகியதன் உண்மை காரணம் இதுதான் – மனம் திறந்த இயக்குனர்!

0
பாரதி கண்ணம்மாவில் இருந்து ரோஷினி விலகியதன் உண்மை காரணம் இதுதான் - மனம் திறந்த இயக்குனர்!
பாரதி கண்ணம்மாவில் இருந்து ரோஷினி விலகியதன் உண்மை காரணம் இதுதான் - மனம் திறந்த இயக்குனர்!
பாரதி கண்ணம்மாவில் இருந்து ரோஷினி விலகியதன் உண்மை காரணம் இதுதான் – மனம் திறந்த இயக்குனர்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி விலகியதற்கான உண்மை காரணம் குறித்து சீரியல் இயக்குனர் பிரவீன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா:

“பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி விலகிய நிலையில், அதற்கான சரியான காரணம் குறித்து சீரியல் இயக்குனர் பிரவீன் மனம் திறந்து பேசி இருக்கிறார். முதலில் அவருக்கு போன் செய்த வெண்பா பரீனா எப்போது என்னை ஜெயிலில் இருந்து வெளியே கொண்டு வர போறீங்க என கேட்க, அடுத்த வாரத்தில் இருந்து நீ வந்துருவ என சொல்லி இருக்கிறார். குழந்தை எப்படி இருக்கான் என கேட்க நன்றாக இருக்கான். அவன் வயிற்றில் இருக்கும் போதே எல்லாம் பார்த்ததால் இப்போது எல்லாம் சுலபமாகி விட்டது என சொல்கிறார்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லை காவ்யா கணவர் இப்படி தான் இருக்க வேண்டுமாம் – ரசிகர்கள் ஷாக்!

பின் கண்ணம்மா விலகலுக்கு காரணம் பற்றி கேட்டதற்கு, ரோஷினிக்கு பெரிய திரையில் பல வாய்ப்புகள் வந்தது ஆனால் சீரியலால் அவருக்கு மேலே முன்னேற முடியவில்லை. கடந்த ஆண்டு மே மாதம் முதல் அவர் விலக இருப்பதாக சொன்னார். ஆனால் நாங்க பேசி இவ்வளவு தூரம் கொண்டு வந்துருக்கோம் என சொல்கிறார். பின் கண்ணம்மா கதாபாத்திரம் மாற்றம் மற்றும் வெண்பா இல்லாத நிலை எல்லாமே எப்படி சமாளித்தீர்கள் என கேட்க, நான் கதையை மட்டும் தான் நம்பி இருக்கேன் என சொல்கிறார்.

மேலும் பழைய கண்ணம்மா மாற்றம் நீதிமன்ற சீனில் தான் வர வேண்டும் என சீரியல் நிர்வாகிகள் சொன்னார்கள். அதனால் சரியாக செய்தோம் என சொன்னார். மேலும் இன்னும் சில நாட்கள் தான் கண்ணம்மா கதாபாத்திரத்தில் கொஞ்சம் நாள் நடித்திருக்கலாம் என சொல்ல, அவங்க போக வேண்டும் என முடிவு செய்ததால் அவரை கட்டாயப்படுத்த முடியவில்லை. அவர் எடுத்த முடிவு சரி என தான் எனக்கு தோன்றியது என சொல்கிறார். வரும் போதே தெரிந்து தான் வந்திருப்பாங்க. ஆனால் பாதியில் போனது எல்லாம் சரியா என கேட்க, அவங்க வாய்ப்பு வந்ததால் போனது என நான் சொல்லவில்லை. சில வாய்ப்புகள் வந்தது அதை வைத்து தான் நான் சொல்கிறேன்.

ப்ரியங்காவிற்கு பதில் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஷிவாங்கி – குவியும் வாழ்த்துக்கள்!

அது எல்லாம் அவங்களுடைய விருப்பம் என சொல்கிறார். அவங்களுக்கு கல்யாணம் கூட ஆகலாம் இதுவாக தான் இருக்கும் என நானாக தான் சொல்றேன் என்று அவர் சொல்லி இருக்கிறார். புதிய கண்ணம்மா தேர்வு செய்ய பல மாநிலங்களில் இருந்து ஆட்களை கூட தேர்வு செய்யலாம் என சொன்னார்கள். ஆனால் நான் உறுதியாக இருந்தேன். கருப்பாக இருந்த பொண்ணு தான் வேண்டும் என இருந்தேன். கண்ணம்மா கதாபாத்திரம் பாவமாக இருக்க வேண்டும். அதிலும், தைரியமாக இருக்க வேண்டும் என சொல்கிறார். ரித்விகா கூட நாங்க கேட்டோம் ஆனால் அவங்க பிசியாக இருந்தார். அதன் பின் தான் வினுஷாவை கண்ணம்மாவாக நான் தேர்வு செய்தேன் என சொல்லி இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here