மத்திய அரசின் பென்ஷன் வழங்குவதில் தாமதம்? காரணம் இதுதான்! வெளியான தகவல்!

0
மத்திய அரசின் பென்ஷன் வழங்குவதில் தாமதம்? காரணம் இதுதான்! வெளியான தகவல்!
மத்திய அரசின் பென்ஷன் வழங்குவதில் தாமதம்? காரணம் இதுதான்! வெளியான தகவல்!
மத்திய அரசின் பென்ஷன் வழங்குவதில் தாமதம்? காரணம் இதுதான்! வெளியான தகவல்!

கடந்த ஏப்ரல் மாதத்திற்கான ஓய்வூதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ராணுவ வீரர்கள் பலர் புகார் எழுப்பி இருக்கும் நிலையில், இதற்கான காரணம் குறித்த சில தகவல்களை மத்திய அரசு பகிர்ந்துள்ளது.

பென்ஷன் தாமதம்

கடந்த 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி தொகையை 34% ஆக உயர்த்தி அரசு அறிவிப்புகளை வெளியிட்டது. இதன் மூலம் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பலனடைய இருக்கின்றனர். மறுபக்கத்தில், சுமார் 58000 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஏப்ரல் மாதத்துக்கான பென்ஷன் வழங்கப்படவில்லை என தற்போது புகார்கள் எழுந்தது. அந்த வகையில், பென்ஷன் பெறாதது குறித்து ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் ஜெனரல்கள் சமூக வலைதளங்களில் புகார் தெரிவித்தனர்.

முழு ஊரடங்கில் இரண்டு மணிநேரம் தளர்வு, 211 பேர் கைது – காவல்துறை நடவடிக்கை!

இந்த புகார்களை கவனத்தில் கொண்ட மத்திய அரசு, ராணுவ வீரர்கள் ஓய்வூதியத்தை பெற உதவி செய்தது. இப்போது, 58000க்கு மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஏப்ரல் மாதத்துக்கான பென்சன் தொகை வழங்கப்படாததற்கான காரணம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதாவது, ஏப்ரல் மாதத்தில் மட்டும் சரியாக 58,275 ராணுவ வீரர்களுக்கு பென்ஷன் வழங்கப்படவில்லை. ஏனென்றால், ஓய்வூதியம் பெறாத ராணுவ வீரர்கள் அனைவரும் SPARSH தளத்தில் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது, ஓய்வூதியம் பெறும் ஒவ்வொரு ஊழியர்களும் ஆண்டு தோறும் நவம்பர் 30ம் தேதிக்குள் SPARSH இணையத்தில் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால் கொரோனா 3ம் அலைப்பரவல் காரணமாக ஓய்வூதியம் பெறுபவர்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும் கடைசி தேதி மார்ச் 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் மார்ச் மாதம் வரை சிலர் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்காததால் அவர்களின் பென்ஷன் நிறுத்தி வைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் SPARSH என்பது ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு பென்ஷன் வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தளம் ஆகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!