Noida இரட்டை கோபுரம் தகர்ப்பின் பின்னணி – காரணம் இது தான்!

0
Noida இரட்டை கோபுரம் தகர்ப்பின் பின்னணி - காரணம் இது தான்!
Noida இரட்டை கோபுரம் தகர்ப்பின் பின்னணி - காரணம் இது தான்!
Noida இரட்டை கோபுரம் தகர்ப்பின் பின்னணி – காரணம் இது தான்!

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் சூப்பர் டெக் நிறுவனத்தால் கட்டப்பட்ட இரட்டை கோபுரம் விதிகளை மீறி கட்டியதாக கூறப்படுகிறது. அதனால் கட்டிடத்தை தகர்த்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடத்தின் பின்னணி குறித்து இப்பதிவில் காண்போம்.

இரட்டை கோபுரம் தகர்ப்பு

இந்தியாவில் கடந்த 2004ம் ஆண்டு நொய்டா நகரில் ஒரு கட்டிடத்தில் 14 தளங்களும், மற்றொரு கட்டிடத்தில் 9 தளங்களும், கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. பிறகு இத்திட்டம் சற்று திருத்தியமைக்கப்பட்டு 2 கட்டடங்களிலும் 40 தளங்கள் வரை கட்டுவதற்கு நொய்டா ஆணையம் அனுமதி அளித்தது. அதன்படி கட்டிடம் சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டது. இதில் அக்பெஸ் கோபுரம் 32 மாடிகளை கொண்டது. இதன் உயரம் 328 அடி, அடுத்தாக சியான் கோபுரத்தில் 31 மாடிகள் உள்ளது. இதன் உயரம் 318 அடி ஆகும். நொய்டா தொழில் நகரத்தை கட்டமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் வாசிக்க ஏதுவாக இக்கட்டிடம் கட்டப்பட்டது.

தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆக.30) மின்தடை ஏற்படவுள்ள இடங்கள் – மின்சார வாரியம் அறிவிப்பு!

அடுக்குமாடி சட்ட விதிகள் மீறப்பட்டு இருப்பதாக கூறி பல்வேறு வழக்குகள் இரட்டை கோபுரத்தின் மீது போடப்பட்டது. சட்டத்திற்கு விரோதமாக இரண்டு கோபுரங்கள் எழுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது . இது குறித்து தொடர்ந்த வழக்கில் இரட்டை கோபுரத்தை தளர்த்த நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இரட்டை கட்டடங்களை இடிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கட்டிடத்தின் 20,000 இடங்களில் வெடிமருந்துகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் கட்டிடத்தை சுற்றி 225 டன்கள் கம்பி வலையும் 110 கிலோ மீட்டர் நீள துணி சுட்டப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து இரட்டை கோபுரத்தை சுற்றி வசிக்கக்கூடிய மக்கள் வளர்ப்புப் பிராணிகளும், 3,000 வாகனங்கள் என அனைத்தும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த முன்னேற்பாடு பணியை தொடர்ந்து இன்று மதியம் 2.30 மணியளவில் சுமார் ஒன்பது விநாடிகளில் ஒட்டுமொத்த கட்டடமும் தரைமட்டமாகி விட்டது. தற்போது கட்டிடம் தகர்த்தப்பட்ட அந்த பகுதி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தண்ணீர் பாய்ச்சி புகையை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!