இந்திய ரயில்வே துறையில் 6 ஆண்டுகளில் 72,000 பணியிடங்கள் ரத்து – இதுதான் காரணம்!

0
இந்திய ரயில்வே துறையில் 6 ஆண்டுகளில் 72,000 பணியிடங்கள் ரத்து - இதுதான் காரணம்!
இந்திய ரயில்வே துறையில் 6 ஆண்டுகளில் 72,000 பணியிடங்கள் ரத்து - இதுதான் காரணம்!
இந்திய ரயில்வே துறையில் 6 ஆண்டுகளில் 72,000 பணியிடங்கள் ரத்து – இதுதான் காரணம்!

இந்திய ரயில்வே துறையில் ஸ்டேஷன் மாஸ்டர், கிளார்க், டிக்கெட் கலெக்டர் போன்ற தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பணியிடங்களுக்கு குரூப் சி பிரிவிலும், பியூன், உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு குரூப் டி பிரிவிலும் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில் 6 ஆண்டுகளில் குரூப் சி மற்றும் குரூப் டி ஆகிய பிரிவுகளில் 72,000 பணியிடங்களை ரத்து செய்ததன் காரணத்தை இந்திய ரயில்வே துறை விளக்கி உள்ளது.

ரயில்வே துறை விளக்கம்:

இந்திய நாட்டிலேயே மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக ரயில்வே துறை இருக்கிறது. இந்த நிறுவனம் மூலம் ஏராளமானவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். இருப்பினும் ஒப்புதல் அளிக்கப்பட்ட பல பணியிடங்களுக்கு, வெளி நிறுவனங்கள் மூலமாக ஒப்பந்தப் பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த துறைக்கு குரூப் ஏ மற்றும் குரூப் பி ஆகிய பிரிவுகளில் கெஸட் நிலை அதிகாரிகளும், குரூப் சி மற்றும் குரூப் டி ஆகிய பிரிவுகளில் கெஸட் நிலை அல்லாத பணியாளர்களும் நியமிக்கப்படுகின்றனர். கடந்த 6 ஆண்டுகளில் குரூப் சி மற்றும் குரூப் டி ஆகிய பிரிவுகளில் உள்ள 72,000 பணியிடங்களை இந்திய ரயில்வே துறை ரத்து செய்துள்ளது.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – முதல்வர் எடுக்கப்போகும் முடிவு என்ன?

மேலும் கடந்த 2015 – 2016 மற்றும் 2020 – 2021 ஆகிய ஆண்டுகளில் 16 ரயில்வே மண்டலங்கள் சார்பில் 56,888 பணியிடங்கள் சரண்டர் செய்யப்பட்டுள்ளன. வடக்கு கோட்ட ரயில்வே சார்பில் 9,000 பணியிடங்களும், தெற்கு ரயில்வே சார்பில் 7,524 பணியிடங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் கிழக்கு கோட்ட ரயில்வே சார்பில் 5,700 பணியிடங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ரயில்வே துறையில் மொத்தமுள்ள 16 மண்டலங்களில் 81,000 பணியிடங்களை ரத்து செய்வதற்கான பரிந்துரை முன் வைக்கப்பட்டதாகவும், அதில் தற்போது வரை 56,888 பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

Exams Daily Mobile App Download

மேலும் குரூப் சி மற்றும் குரூப் டி பிரிவுகளில் உள்ள பல பணியிடங்கள் தேவையற்ற ஒன்றாக மாறிவிட்ட நிலையில், அவை ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும் வரும் காலத்தில் இந்தப் பணியிடங்களை நிரப்ப வேண்டாம் என்று ரயில்வே துறை முடிவு செய்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பணியிடங்களை ரத்து செய்வதற்கு முன்பாக ரயில்வே துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த ஆய்வின் முடிவில், எந்தப் பலனும் இல்லாத பணியிடங்களை ரத்து செய்வதன் மூலம், பொருளாதார ரீதியாக ரயில்வே துறைக்கு பெரிய அளவில் சேமிப்பு கிடைக்கும் என்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாகத்தான் பலன் இல்லாத (குரூப் சி மற்றும் குரூப் டி பிரிவு) பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!