“பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து அகில் விலகியதற்கான காரணம் – அவரே வெளியிட்ட வீடியோ!

0
"பாரதி கண்ணம்மா" சீரியலில் இருந்து அகில் விலகியதற்கான காரணம் - அவரே வெளியிட்ட வீடியோ!
“பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து அகில் விலகியதற்கான காரணம் – அவரே வெளியிட்ட வீடியோ!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அகிலன் திடீரென மாற்றப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ள நிலையில், அவர் விலகி உள்ளாரா அல்லது நீக்கப்பட்டாரா என்ற கேள்விக்கு அவரே விளக்கமளித்துள்ளார்.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவி சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் தனி இடம் உண்டு. பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி 2, செந்தூரப்பூவே சீரியல்கள் பல்வேறு வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. மாறுபட்ட கதைக்களத்துடன் இருப்பதால் மற்ற தொலைக்காட்சி சீரியல்களை பின்னுக்கு தள்ளி தொடர்ந்து விஜய் டிவி சீரியல்கள் முன்னிலையில் உள்ளன. குறிப்பாக பாரதி கண்ணம்மா சீரியலில் அதிரடி திருப்பங்களுடன் கதை சென்று கொண்டிருக்கிறது.

பாரதியும், கண்ணம்மாவும் சேருவார்களா? ஹேமா, லட்சுமி குறித்த உண்மை கண்ணம்மாவிற்கும் பாரதிக்கும் தெரிய வருமா என்ற எதிர்பார்ப்புடன் பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட்கள் உள்ளது. இந்நிலையில் அந்த சீரியலில் அஞ்சலியின் வளைகாப்பு நிகழ்ச்சிகள் குறித்த புகைப்படம் வெளியிடப்பட்டது. அதில் அகில் கதாபாத்திரத்தில் வேறு ஒருவர் இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். அகிலன் மாற்றப்பட்ட காரணம் குறித்து தொடர்ந்து கமெண்ட் செய்து வந்தனர்.

TN Job “FB  Group” Join Now

அஞ்சலி கதாபாத்திரத்தில் நடிக்கும் கண்மணியும் இது குறித்து பதிவு ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். இந்நிலையில் அவர் அந்த சீரியலில் இருந்து நீக்கப்பட்டாரா, இல்லை அவரே விலகி விட்டாரா என கேள்வி இருந்தது. இதற்கு ஒரு வீடியோ மூலமாக விளக்கமளித்த அகில், தற்போது சினிமாவில் நடித்து வருகிறேன் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே, அகில் நடிகர் பிரபுதேவாவின் படம் ஒன்றில் நடித்து உள்ளாராம். அது போக விஷால் நடிக்கும் புதிய படம் ஒன்றிலும் நடித்து உள்ளாராம். இது போக இன்னும் பிரபலமான நிறுவனத்தின் தயாரிப்பில் கமிட் ஆகியிருப்பதாகவும், விரைவில் அதை பற்றி அறிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!