Realme GT 5G ஸ்மார்ட்போன் விற்பனை இன்று தொடக்கம் – சிறப்பம்சங்கள், தள்ளுபடி!

0
Realme GT 5G ஸ்மார்ட்போன் விற்பனை இன்று தொடக்கம் - சிறப்பம்சங்கள், தள்ளுபடி!
Realme GT 5G ஸ்மார்ட்போன் விற்பனை இன்று தொடக்கம் - சிறப்பம்சங்கள், தள்ளுபடி!
Realme GT 5G ஸ்மார்ட்போன் விற்பனை இன்று தொடக்கம் – சிறப்பம்சங்கள், தள்ளுபடி!

பல்வேறு சிறப்பம்சங்களுடன் இளைஞர்களை கவர்ந்துள்ளது Realme GT 5G ஸ்மார்ட்போன். இந்நிலையில் இன்று பிளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வரும் இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு 3000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

Realme ஸ்மார்ட்போன்:

நாளுக்கு நாள் இளைஞர்களிடையே மொபைல் போன் குறித்த மோகமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போது இளைஞர்கள் கேமரா குவாலிட்டி பொறுத்தே மொபைல் போன்களை வாங்கி வருகின்றனர். அதிகப்படியான ரேம் வசதி உள்ள மொபைல் போன்கள் கேம் விளையாடுவதற்கு ஏதுவாக இருந்து வருகிறது. இதனால் இளைஞர்களிடையே மொபைல் போன் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. அதனை தொடர்ந்து ரியல்மி ஜிடி 5 ஜி இன்று விற்பனைக்கு வருகிறது.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு பணி – அரசுக்கு கோரிக்கை!

இந்த விற்பனை பிளிப்கார்ட், ரியல்மீ ஆன்லைன் ஸ்டோர் மற்றும் இந்தியா முழுவதும் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த மொபைல் போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் விலை ரூ.37,999 க்கு, 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட டாப் வேரியன்ட் ரூ.41,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ரியல்மி ஜிடி 5 ஜி ஆண்ட்ராய்டு 11 மென்பொருளுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 செயலி மற்றும் 5 ஜி வசதியுடன் களமிறங்குகிறது.

6.43 அங்குல முழு எச்டி+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே உடன் களமிறங்கும் இந்த மொபைல் போனில் கைரேகை அம்சம் உள்ளது குறிப்பிடத்தக்கது. மைக்ரோ எஸ்டி கார்டுக்கு ஆதரவு இல்லாமல் 12 ஜிபி வரை எல்பிடிடிஆர் 5 ரேம் மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ் உள்ளது. இந்த மொபைல் போனில் 4500mAh பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இது 65W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது. முக்கிய அம்சமான கேமராவில் 64 மெகாபிக்சல் சென்சார், 8 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் மற்றும் பஞ்ச்-ஹோல் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா இணைக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இத்தனை சிறப்பம்சங்களை கொண்ட இந்த மொபைல் போனை ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி இஎம்ஐ அல்லது விருப்பத்தின் மூலம் வாங்கும் போது, ரூ.3,000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிளிப்கார்ட் மூலம் வாங்கும் பட்சத்தில் ரியல்மி ஜிடி 5ஜி யின் அடிப்படை வேரியன்ட் ரூ.26,599 க்கும், டாப் மாடல் ரூ.29,399 க்கும் வாங்கலாம் என கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!