SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – RD வட்டி விகிதங்கள் உயர்வு!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - RD வட்டி விகிதங்கள் உயர்வு!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - RD வட்டி விகிதங்கள் உயர்வு!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – RD வட்டி விகிதங்கள் உயர்வு!

சமீபத்தில், நிரந்தர வைப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்திய ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி, தொடர் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களையும் தற்போது உயர்த்தி இருக்கிறது. இதன் புதிய விகிதங்கள் குறித்து இப்பதிவில் காணலாம்.

வட்டி விகிதங்கள்

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), தனது வாடிக்கையாளர்களுக்கான தொடர் வைப்பு (RD) கணக்கின் வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இந்த தொடர் வைப்புத்தொகை (RD) என்பது வங்கியின் ஒரு பிரபலமான சேமிப்புத் திட்டமாகும். இது வழக்கமான தவணைகளில் முதலீட்டுத் தொகைக்கு நிலையான வட்டி விகிதத்தை வழங்குகிறது. பொதுவாக RD காலத்தின் முடிவில், வாடிக்கையாளர்கள் முதிர்வுத் தொகையைப் பெறுவார்கள்.

15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு கடிதம்!

இப்போது இந்த தொடர் வைப்பு கணக்குகளை (RD) வாடிக்கையாளர்கள் SBI வங்கியின் கிளைகளில் அல்லது தபால் நிலையங்களில் வெறும் ரூ.100 மட்டும் செலுத்தி துவங்க முடியும். தவிர ஆன்லைன் மற்றும் SBI நெட்பேங்கிங் வசதியைப் பயன்படுத்தி RD கணக்கைத் திறக்கலாம். இந்த தொடர் வைப்பு கணக்குகளுக்கான குறைந்தபட்ச சேமிப்பு 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை செல்லும். மேலும் முதிர்வுக்கு முன்பே உங்கள் RD கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம். ஆனால் முதிர்வுக்கு முன் பணத்தை எடுத்தால், சிறிய அபராதம் விதிக்கப்படும்.

TNPSC கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இப்போது SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கான தொடர் வைப்பு கணக்கு வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. அந்த வகையில் RD வட்டி விகிதங்களை 5.1 சதவீதத்திலிருந்து 5.4 சதவீதமாகவும், மூத்த குடிமக்களுக்கு 50 அடிப்படை புள்ளிகள் கூடுதல் வட்டி விகிதங்களையும் வழங்க SBI வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் ஜனவரி 15, 2022 முதல் பொருந்தும் என்பது கவனிக்கத்தக்கது. இப்போது, SBI வங்கியில் கிடைக்கும் வட்டி விகிதங்களை பொறுத்தளவு,

  • 1 முதல் 2 ஆண்டுகள் வரையிலான RDக்கு 5.1 % வட்டி கிடைக்கும்.
  • 2 முதல் 3 ஆண்டுகள் வரையிலான RDக்கு 5.1 % வட்டி கிடைக்கும்.
  • 3 முதல் 5 ஆண்டுகளுக்கான RD கணக்கில் 5.3 % வட்டி கிடைக்கும்.
  • 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை முதிர்வு கொண்ட FDகளுக்கு 5.4% வட்டி வழங்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!