IPL 2021 : KKR vs RCB போட்டியில் ஒவ்வொரு விக்கெட், சிக்ஸர், பவுண்டரிக்கும் நிதியுதவி! RCB அறிவிப்பு!!
கொல்கத்தாவிற்கு எதிரான ஆட்டத்தில் அடிக்கப்படும் ஒவ்வொரு விக்கெட், சிக்ஸர் மற்றும் பவுண்டரிக்கும் நிதியுதவி வழங்கப்படும் என பெங்களூர் அணி அறிவித்து உள்ளது.
ஒவ்வொரு விக்கெட், சிக்ஸர், பவுண்டரிக்கும் நிதியுதவி:
கொரோனா நோய் தொற்றினால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது. நேற்று நடந்த இரண்டாம் கட்ட முதலாவது போட்டியில் (30வது ஆட்டம்) சென்னை – மும்பை அணிகள் மோதின. அதில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றுள்ளது. அதனை தொடர்ந்து, இன்று (செப் 20) நடக்க இருக்கும் 31வது ஆட்டத்தில் கொல்கத்தா – பெங்களூர் அணிகள் மோதிக் கொள்ள உள்ளன.
IPL 2021 : KKR vs RCB இன்று பலப்பரீட்சை – உத்தேச 11 அணி, பிட்ச் ரிப்போர்ட்!
இதில் பெங்களூர் அணி எப்போதும் இயற்கை, சுற்றுசூழல் மற்றும் மனித நேயம் ஆகியவற்றினை அடிப்படையாக கொண்ட கருத்துக்களை வலியுறுத்தியே செயல்படும். கடந்த 2011ம் ஆண்தில் பசுமையை காக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி, பச்சை நிற ஜெர்சியில் களமிறங்கியது. அப்போதில் இருந்து தற்போது வரை புதுமையான விஷயங்களை மேற்கொண்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளது.
IPL 2021 – RCB கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகும் விராட் கோஹ்லி! ரசிகர்கள் அதிர்ச்சி!
அந்த வகையில் தற்போது, புதிய முயற்சியினை மேற்கொள்ள உள்ளது. கொரோனா தொற்றின் போது சேவை பணியாற்றிய முன்களப் பணியாளர்களுக்கு மரியாதையை செலுத்தும் விதமாக நீல நிற ஜெர்ஸியை அணிந்து விளையாட உள்ளனர். இந்த இரண்டாம் கட்ட ஆட்டங்கள் முழுவதும் இந்த ஜெர்சியிலேயே களம் காணுவர். அதே போல், வீரர்கள் அணிந்து விளையாடிய நீல நிற ஜெர்ஸி பின்னர் ரசிகர்களிடம் ஏலம் விடப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் தொகை ஏழைகளுக்கும், விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுக்கும் தடுப்பூசி செலுத்த உதவியாக வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
IPL 2021, CSK vs MI LIVE Updates : 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அசத்தல் வெற்றி பெற்றது!!
அவற்றோடு இன்றைய கொல்கத்தாவிற்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் வீரர்கள் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸர், பவுண்டரி, எடுக்கும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் ஸ்பான்ஸர்கள் முன்களப் பணியாளர்களுக்கு வெகுமதி வழங்க உள்ளனர். இந்த தகவல் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.