பழைய 100, 10 & 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கம் – ரிசர்வ் வங்கி முடிவு!!
இந்தியாவில் தற்போது புழக்கத்தில் உள்ள பழைய 5, 10 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை நீக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக அதன் துணை மேலாளர் மகேஷ் அவர்கள் கூறி உள்ளார். இதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பழைய ரூபாய் நோட்டுகள்:
ரிசர்வ் வங்கி சார்பில் புதிய 100 ரூபாய் நோட்டுகள் ஊதா வண்ணத்தில் வெளியிடப்பட்டு 2019 முதல் புழக்கத்தில் உள்ள நிலையில், பழைய 100 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே புது 100 ரூபாய் நோட்டின் புழக்கம் தான் தற்போது அதிகமாக உள்ளது. RBI இன் இந்த முடிவால் பழைய 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவி வந்தது. ஆனால் இது முற்றிலும் தவறானது. பழைய 100 ரூபாய் நோட்டுகள் செல்லும், அதன் புழக்கத்தை மட்டுமே குறைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வி இயக்குனர் விளக்கம்!!
மேலும் 15 வருடங்களாக புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்கள் இன்னும் பொதுமக்களின் கைகளில் அதிகளவில் சேரவில்லை. அதனை பெற பெரும்பாலானோர் தயங்குவதே இதற்கு காரணம். இதனால் அவை தேங்கி உள்ளன. எனவே அதன் புழக்கத்தை அதிகரிக்க பழைய 10 மற்றும் 5 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை நீக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்திய நிறுவனங்களில் 7.6% ஊதிய உயர்வு வழங்கப்படும் – ஆய்வு முடிவில் தகவல்!!
இதற்கான நடவடிக்கைகள் குறித்து மாநில அளவிலான பாதுகாப்பு அமைப்பு மற்றும் மாநில அளவிலான நாணய நிர்வாகக் குழு ஆகியவற்றுடன் நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி மார்ச் – ஏப்ரல் மாதத்திற்குள் பழைய 5, 10 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
For Online Test Series
கிளிக் செய்யவும்
To Join Whatsapp
கிளிக் செய்யவும்
To Join Facebook
கிளிக் செய்யவும்
To Join Telegram Channel
கிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channel
கிளிக் செய்யவும்